மேலும் அறிய

Crime: குழந்தைகள் துன்புறுத்தல் ஆபாச இணையதளம் நடத்திய இந்திய மருத்துவருக்கு 6 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தில் குழந்தைகள் துன்புறுத்தல் ஆபாச இணையதளம் நடத்திய இந்திய மனநல மருத்துவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் தென் கிழக்கு லண்டனில் உள்ள லேவிசம் பகுதியில் வசித்து வந்தவர் கபீர்கார்க். இவர் மனநல மருத்துவர்.  குழந்தைகளுக்கான ஆபாச இணையதளம் நடத்திய குற்றத்திற்காக இவரை கடந்தாண்டு அந்தநாட்டு போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகள் மீதான வன்முறை ஆபாச இணையதளம்:

இந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை அந்த நாட்டில் உள்ள ஊல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை முடிந்து மருத்துவர் கபீர்கார்க்கிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளனர்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கபீர்கார்க் பெங்களூரில் மருத்துவ படிப்பை முடித்த பிறகு மேல்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு படிப்பை முடித்த பிறகு அங்கேயே இருந்துள்ளார். அந்த நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச இணையதளங்கள் இயங்குவதை கண்டுபிடித்த அந்த நாட்டு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிக்கியது எப்படி?

அப்போது, மருத்துவர் கபீர்கார்க் தன்னுடைய மடிக்கணினியில் குழந்தைகள் ஆபாச இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அந்த ஆபாச இணையதளத்தின் அட்மின்களில் ஒருவராக இருந்துள்ளார். அவரது மடிக்கணினியில் ஆபாச படங்கள், புகைப்படங்கள், மருத்துவ அறிக்கைகள் இருந்துள்ளன. அவரது மருத்துவ அறிக்கைகளில் ஒன்று இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை என்ற அறிக்கையும் இருந்துள்ளது.

இந்த குழந்தைகள் ஆபாச இணையதளத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருந்து வந்ததும், அவர்களில் சிலர் அட்மின்களாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல, 34 வயதான மேத்யூ ஸ்மித் என்பவரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும், அவரிடம் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களும், வீடியோக்களையும் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாடரேட்டர்:

இவர்கள் நடத்திய குழந்தைகள் ஆபாச இணையதளத்தில் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்த மருத்துவர் கபீர்கார்க், மிகவும் தீவிரமாக இந்த இணையதளத்தில் இருந்ததை தொடர்ந்து அவரை இணையதளத்தின் மாடரேட்டராக மாற்றியுள்ளனர். கபீர்கார்க் தனது அறையில் மடிக்கணினியில் மாடரேட்டர் கணக்கின் மூலம் உள்ளே நுழைந்தபோது அவரை கையும், களவுமாக அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இணையதளத்தின் விதிகளை வகுப்பதும், உறுப்பினர்களை சேர்ப்பதும், நீக்குவதையும் தன் அதிகாரமாக அவர் கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. இதைத்தடுக்க அந்த நாட்டு அரசாங்கங்களும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்களை சிலர் இழைத்து வருவது கவலையை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் உள்பட யார் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டாலும் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது ஆகும். 

மேலும் படிக்க: Minister Nirmala Sitharaman: அவர் ஆட்சியில் 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு வீசப்பட்டன.. நிர்மலா சீதாராமன் ஒபாமாவுக்கு கண்டனம்..

மேலும் படிக்க: Saliva Pregnancy Test: எச்சில் மூலம் பெண்களுக்கு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி அறிமுகம்… எப்படி வேலை செய்யும்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget