Watch Video: 1000 அடி உயரத்தில் பாராசூட் உதவியுடன் தேசிய கொடி ஏற்றம்.. வைரல் வீடியோ..!
சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் இந்திய தூதரகம் சார்பில் கொடி ஏற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. அத்துடன் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் வகையில் ‘ஹர் கர் திரங்கா’ என்ற ஒன்றையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் சுதந்திர தின விழா இம்முறை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள தூதரகத்தில் நேற்று ஒரு புதிய முயற்சி ஒன்று செய்யப்பட்டது. அதாவது ஸ்கை டைவர் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து இந்திய தேசிய கொடியை தரையிலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் ஏற்றினார். அந்தக் கொடியுடன் அவர் சில சாகசங்களையும் செய்தார்.
High above in the skies of #Russia the #Tiranga is unfurled with great pride as we celebrate the #AzadiKaAmritMahotsav #HarGharTiranga campaign@narendramodi @DrSJaishankar @AmbKapoor @MEAIndia @IndianDiplomacy @AmritMahotsav @DDIndialive @ANI pic.twitter.com/hX6DqNJmUd
— India in Russia (@IndEmbMoscow) August 14, 2022
இது தொடர்பான வீடியோவை ரஷ்யாவிலுள்ள இந்தியா தூதரகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் அவர் முப்படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நம் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். இன்று புதிய பாதையில் புதிய உறுதியுடன் நாம் பயணத்தை தொடர வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கடன்பட்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பெண்களின் சக்தியை பார்த்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். குறிப்பாக ராணி லக்ஷ்மிபாய், வேலு நாச்சியார் போன்றவர்களின் பங்களிப்பை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் நாம் 5 முக்கிய உறுதி மொழியை எடுக்க வேண்டும். அதாவது விஷிஷ்த் பாரத், நம்முடைய ஒற்றுமை, நம்முடைய கடமையை சரியாக செய்தல் உள்ளிட்டவற்றை எடுக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிகாக இளைஞர்கள் நிச்சயம் பாடுபட வேண்டும். நாம் இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒட்டு மொத்த மனித குளத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். அது தான் நம்முடைய பலம் ” எனக் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்