Wordle | குளியலறையில் 17 மணிநேரம்.. மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய Wordle விளையாட்டு!
Wordle விளையாடி விட்டு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபர் மூதாட்டியை மிரட்டியுள்ளார்
உலகம் முழுவதும் சமீபத்திய ட்ரெண்டிங்காக இருப்பது வோர்டில். பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் விளையாடத் தொடங்கிய இந்த குறுக்கெழுத்து விளையாட்டு ஒரு மூதாட்டியின் உயிரையே காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவம் சிகாகோவில் நடந்துள்ளது.
Wordle..
குறுக்கெழுத்தின் டிஜிட்டல் வடிவம் தான் இந்த Wordle. குறுக்கெழுத்தின் அப்டேட் என்றுக் கூட சொல்லலாம். அமெரிக்காவின் சாப்ட்வேர் எஞ்சினியரான ஜோஸ் வார்டில் என்பவர் இந்த Wordle வார்த்தை விளையாட்டை உருவாக்கினார். 5 எழுத்துக்களுக்கான இடம் கொண்ட 5 கட்டங்கள் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை உருவாக்கப்படும். அதனை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும். சரியான எழுத்துகளை உள்ளே பதிவிட்டு சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சரியான வார்த்தையை கண்டுபிடித்தால் அதனை மீண்டும் வெறும் கட்டங்களாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கண்டுபிடிக்க சொல்லலாம். இந்த விளையாட்டு தற்போது அடுத்தக்கட்டத்தையும் தொட்டுவிட்டது. அதாவது கஸ்டம் வோர்டிலை இப்போது உருவாக்க முடியும். அதாவது நாமே வோர்டிலை உருவாக்கி அதனை நண்பர்களுடன் பகிந்து விடையை கண்டிபிடிக்க சொல்லலாம். இப்படி பலரும் ஆன்லைனில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். தூரத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் ஆன்லைனின் இணைந்து விளையாடி வருகின்றனர்.
சிகாகோ சம்பவம்..
சிகாகோவைச் சேர்ந்த 80 வயதான மூதாட்டி ஹோல்ட் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனிமையைப் போக்குவதற்காக செல்போனில் தனது மகள் மற்றும் உறவினர்களுடன் Wordle விளையாடிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் விடையை பகிர்ந்து வந்த மூதாட்டி குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு எந்த பதிலையும் அளிக்கவில்லை. பின்னர் அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர். நீண்ட நேரம் கழித்தும் மூதாட்டியின் Wordle எந்த பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏதோ சிக்கல் என்பதை புரிந்துகொண்டார்கள். உடனடியாக லோக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் வீட்டு குளியலறையில் 17 மணி நேரமாக பூட்டி வைக்கப்பட்ட மூதாட்டியை மீட்டனர்.
என்ன நடந்தது?
Wordle விளையாடி விட்டு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபர் மூதாட்டையை மிரட்டியுள்ளார். கையில் கத்தரிக்கோலை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் குளியலறைக்கு சென்று குளிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவன் சொல்வதை எல்லாம் மூதாட்டியும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மூதாட்டியை குளியலறையிலேயே வைத்து பூட்டிவிட்டு அந்த நபர் தப்பியுள்ளார். விசாரணையில் அந்த நபர் டேவிஸ் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 32 வயதான அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வீட்டுக்குள் புகுந்து மற்றவர்களை மிரட்டுவதையே அடிக்கடி செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.