Greta Thunberg: சொந்த நாட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர்...! என்ன காரணம் தெரியுமா..?
தன் சொந்த நாடான ஸ்வீடனுக்கு எதிராக சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் வழக்கு தொடர்ந்துள்ளார் .
தன் சொந்த நாடான ஸ்வீடனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க். கடந்த 2021 செப்டம்பரில் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் பருவநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய கிரேட்டா துன்பெர்க், "மனிதர்கள் வாழ ஒரே ஒரு பூமி தான் இருக்கிறது. இன்னொரு பூமியெல்லாம் இல்லை. இன்னொரு கோளும் மனிதர்கள் வாழத் தகுதியுடன் கண்டறியப்படவில்லை. அதனால் நமக்கு இருக்கும் ஒரே வழி இப்போது நாமிருக்கும் இந்த பூமியை பாதுகாப்பது மட்டுமே. அதைச் செய்வோம். உலகத் தலைவர்கள் அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். சும்மா பேசிக் கொண்டே இருக்காதீர்கள் " என்று கூறியிருந்தார். சின்னஞ்சிறுப் பெண்ணான கிரேட்டாவின் கோபம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. காலநிலை மாற்றம் குறித்து சுய பரிசோதனை செய்யத் தூண்டியது.
சொந்த நாட்டுக்கு எதிராக வழக்கு:
இந்நிலையில் தான் ஸ்வீடன் நாட்டு சூழலியல் செயற்பாட்டாளராக கிரெட்டா துன்பெர்க் தன்னைப்போன்ற சூழலியல் சிறார் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தன் சொந்த நாட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். உலகளவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கையின் ஒருபகுதியாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் அண்மையில் இதுபோன்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 2019ல் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம், காலநிலை மாற்றத்துக்கு எதிராக அரசாங்கம் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று தீர்ப்பளித்திருந்தது. அதேபாணியில் இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரெட்டா துன்பெர்க் மற்றும் 600 சூழலியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து ஸ்வீடனின் காலநிலை கொள்கை நாட்டின் அரசியல் சாசனத்துக்கும், மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
என்ன காரணம்..?
கிரெட்டா தனது மனுவில், ஸ்வீடன் அரசு தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிக்கு ஏற்ற வளமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு ஏற்ற நீடித்த வளர்ச்சிக்கான அரசியல் சாசன பரிந்துரைகளை பின்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து ஸ்வீடன் நட்டின் டேஜென்ஸ் நைட்டர் இதழுக்கு அளித்தப் பேட்டியில், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
View this post on Instagram