இளம்பெண்ணுடன் தொடர்பு! போட்டுக்கொடுத்த ChatGPT; மன உளைச்சலில் கணவர்! விவாகரத்து கோரும் மனைவி!
தனது கணவருக்கு இளம்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அதை ChatGPT மூலம் கண்டறிந்ததாகவும் கூறி ஒரு பெண் விவாகரத்து கோரியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவருக்கு இளம்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அதை ChatGPT மூலம் கண்டறிந்ததாகவும் கூறி ஒரு பெண் விவாகரத்து கோரியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 12 வருடங்களாக தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், ChatGPT மூலம் தனது கணவரின் திருமணத்தை மீறிய உறவை கண்டறிந்ததாக கூறுகிறார். இதனால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எதிர்காலத்தை கணிக்க காபி அல்லது தேநீர் தூளைப் படிக்கும் பழங்கால நடைமுறையான டாசியோகிராஃபியின் டிஜிட்டல் பதிப்பிற்காக கிரேக்கப் பெண் ChatGPT-ஐ நாடினார்.
அந்த பெண்ணும் அவரது கணவரும் காபி கோப்பையுடன் புகைப்படங்களை AI சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் கண்டிப்பாக உண்மையாக மட்டுமே இருக்கும் என ஆழமாக நம்பியுள்ளார் அந்த பெண்.
அதன்படி, முடிவுகள் கணவருக்கு எதிராக வந்தது. அவரது கணவர் "E" என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு இளைய பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு சேதம் விளைவிக்கும் விளிம்பில் இருப்பதாகவும் ChatGPT அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அவளுடைய சொந்த கோப்பை, வீட்டில் துரோகம் மற்றும் இடையூறுக்கான அறிகுறிகளைக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண், தனது கணவரை வெளியேறச் சொல்லி, விவாகரத்து பற்றி தங்கள் குழந்தைகளுக்குத் தெரிவித்தார். சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தொடங்கினார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், “நான் அதை முட்டாள்தனம்னு சொல்லி சிரிச்சேன். ஆனால் அவள் அதை சீரியஸா எடுத்துக்கொண்டாள். என் சாமான்களை பேக் பண்ண சொன்னாள். நாங்க முடிச்சிட்டோம்னு சொன்னா, அடுத்தது எனக்குத் தெரியும். ஒரு வழக்கறிஞரிடமிருந்து எனக்கு போன் வந்தது.
சில வருடங்களுக்கு முன்பு, நான் என் வேலையை இழந்துவிட்டு வெளிநாடு சென்றுவிடுவேன் என்று ஒரு ஜோதிடரால் அவள் நம்ப வைக்கப்பட்டாள். அதில் எதுவும் உண்மை இல்லை என்பதை உணர அவளுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது” எனத் தெரிவித்தார்.





















