WWF report : 50 ஆண்டுகளில் 94% விலங்குகள் அழிவு ! - அதிர்ச்சி ரிப்போர்ட் !
பிரேசிலிய அமேசானில் பிங்க் நதி டால்பின்களின் எண்ணிக்கை 1994 மற்றும் 2016 க்கு இடையில் 65% குறைந்துள்ளது
காடுகள் அழிக்கப்பட்டு கடல்கள் மாசுபடுவதால், 1970ஆம் ஆண்டு முதல் உலக வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வனவிலங்கு நிதியம் (The World Wildlife Fund ) 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களை உள்ளடக்கிய 32,000 வனவிலங்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதற்காக லண்டனில் உள்ள Zoological Society of London என்னும் விலங்கியல் சங்கத்திடம் இருந்து தரவுகளை பெற்று நடத்தப்பட்ட ஆய்வில் விலங்குகளின் எண்ணிக்கை 69% குறைந்துள்ளது என கண்டறிந்துள்ளது. காடுகளை அழிப்பது, மனித சுரண்டல், மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவைதான் இந்த அழிவிற்கு முக்கியமான காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது. லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியனில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கைதான் அதிக அளவில் குறைந்துள்ளது. அதாவது கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 94% விலங்குகள் அழிந்திருக்கின்றன.பிரேசிலிய அமேசானில் பிங்க் நதி டால்பின்களின் எண்ணிக்கை 1994 மற்றும் 2016 க்கு இடையில் 65% குறைந்துள்ளது
இது இயற்கையின் அழிவையும் , அவை தொடர்ந்து அழிந்து வருவதை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது என லண்டனின் விலங்கியல் சங்கத்தின் (ZSL) பாதுகாப்பு மற்றும் கொள்கை இயக்குனர் ஆண்ட்ரூ டெர்ரி கூறினார். மேலும் பேசிய அவர் ஆண்டுக்கு சுமார் 2.5% என்ற விகிதத்தில் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறினார். ஜனநாயகக் குடியரசின் கஹுசி-பீகா தேசிய பூங்காவில் உள்ள கிழக்கு தாழ்நில கொரில்லா மக்கள்தொகை புஷ்மீட் வேட்டையின் காரணமாக 1994 மற்றும் 2019 க்கு இடையில் 80% குறைந்துள்ளது. விருங்கா தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மலை கொரில்லா மக்கள்தொகை 2010 இல் சுமார் 400 நபர்களில் இருந்து 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் பரவலாக விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது
View this post on Instagram
"எனவே நமது இயற்கையைப் பாதுகாக்க எங்களுக்கு நிதியுதவி வழங்க பணக்கார நாடுகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று WWF இன் ஆப்பிரிக்காவிற்கான பிராந்திய இயக்குனர் ஆலிஸ் ருஹ்வேசா கூறினார். விலங்குகளை பாதுகாக்க உலக அளவில் ஒருங்கிணைந்த குழு ஒன்றை அமைக்க இந்த குழு தற்போது திட்டமிட்டுள்ளது.