Girl Saving Puppies From Bear : நாய் குட்டிகளைக் காக்க கரடியுடன் போராட்டம் நடத்திய சிறுமி
அச்சமின்றி கரடியை துரத்திய சிறுமியின் துணிச்சலை பாராட்டி ட்விட்டரில் வீடீயோவை பகிர்ந்து வரும் இணையவாசிகள்.
பெண்மணி ஒருவர் மிக பெரிய கரடியை மதில் சுவரில் இருந்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவற்றில், ஆஜானுபாகுவான கரடி ஒன்று தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு பாதுகாப்பாக நடந்து வருகிறது. கரடி வருவது தெரியாமல் அந்நேரம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் அதன் குட்டிகள் வெளியே வந்து விடுகின்றன. தாய் நாயும், குட்டிகளும் வருவதை பார்த்த தாய் கரடி, நாய்குட்டிகளை தாக்க முற்படுகிறது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் நாய் குட்டிகளை காக்க, கரடியை மதில் சுவற்றில் இருந்து அச்சமின்றி கீழே தள்ளுகிறார். மேலும் தள்ளிய வேகத்தில் நாய் குட்டிகளை தூக்கிக்கொண்டு அவர் ஓடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Both moms are protecting their children .. both did well #widlife #mothers video- shared pic.twitter.com/TMwsOyqB30
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 2, 2021
இது குறித்து பேசியுள்ள சிறுமி "நாய்கள் சத்தமாக குரைப்பதை கேட்டு ஓடி வந்தேன், கரடியை பார்த்தேன், அது என் நாய்க்குட்டியை இழுத்து கொண்டு இருந்தது, உடனே நான் கரடியை பிடித்து கீழே தள்ளினேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவை பலர் ட்விட்டரில் பகிர்ந்து, 17 வயது சிறுமியின் வீரத்தை பாராட்டி வருகின்றனர்.