Viral Video: முகத்தை அஷ்டகோணலாக்கி பயமுறுத்திய பெண்.. அலறி பயந்த குரங்கு... விஜய் சேதுபதியை மிஞ்சும் ரியாக்ஷன்!
பெண்ணைப் பார்த்து கிட்டத்தட்ட மாரடைப்பே வந்ததுபோல் தெறித்து பயந்து கீழே விழும் இந்தக் காட்சி காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி உள்ளது.
மனிதர்கள் எவ்வளவு தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை படம்பிடித்து இன்ஸ்டா பயனர்களைக் கவர நினைத்தாலும், தங்கள் குட்டி குட்டி செய்கைகளால் பறவைகளும் விலங்குகளும் அவற்றைத் தூக்கி சாப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அந்த மிருகக்காட்சி சாலைக்கு வந்த பெண்ணின் முகத்தை மிக அருகில் பார்த்து, குரங்கு ஒன்று மூச்சடைத்து பயந்து கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிருகக்காட்சி சாலையில் கண்ணாடிக்கு மற்றொரு புறம் இந்தக் குரங்கு பின்புறம் வேடிக்கை பார்த்தபடி உள்ள நிலையில், பார்வையாளர்கள் புறம் உள்ள இந்தப் பெண் குரங்கு கவனிக்காத சமயத்தில் வந்து மிக அருகில் அமர்கிறார்.
தொடர்ந்து அவர் இருவருக்கும் இடையே உள்ள கண்ணாடியைத் தட்டியதும் நிதானித்துக்கு வந்து திரும்பி பார்க்கும் குரங்கு, பெண்ணைப் பார்த்து கிட்டத்தட்ட மாரடைப்பே வந்தது போல் தெறித்து பயந்து கீழே விழும் இந்தக் காட்சி காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி உள்ளது.
View this post on Instagram
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’படத்தில் காயத்ரியின் முகத்தை அருகில் பார்க்கும் விஜய் சேதுபதியின் ’ப்பா...’ ரியாக்ஷனை ஓரளவு ஒத்து இந்தக் குரங்கின் ரியாக்ஷன் உள்ள நிலையில் , இந்த வீடியோவை இன்ஸ்டாவாசிகள் ட்ரெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்
’animals are clumsy’ எனும் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, 23.7 மில்லியன் பார்வைகளையும் 1.9 மில்லியன் லைக்குகளையும் பெற்று இன்ஸ்டாவைக் கலக்கி வருகிறது.
இதேபோல் முன்னதாக மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களுக்கு தனது குழந்தையை காட்டி மகிழும் கொரில்லா ஒன்றின் செய்கை வைரல் ஆனது.
View this post on Instagram
கனடாவில் உள்ள கல்கரி உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், மகேந்திர பாகுபலியை தூக்கிக் காண்பிக்கும் சிவகாமி, லயன் கிங் காட்சிகள்போல் தன் குட்டி கொரில்லாவை தாய் தூக்கிக் காண்பித்து மகிழ்கிறது. இந்த வீடியோவும் முன்னதாக லைக்ஸ் அள்ளி இன்ஸ்டாவில் ஹிட் அடித்தது.