பல்வேறு பிரச்னைகளால் முகப்பருக்கள் வருகின்றன. ரசாயனங்களை பயன்படுத்தினால் அது அதிகமாகும்.

சரி, இவற்றை இயற்கையாகவே தவிர்க்க விரும்பினால், அதற்காக பின்பற்ற வேண்டிய குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சருமத்தில் ஏற்படும் பருக்களுக்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் குறையும். புதிய கற்றாழை கூழைப் தடவி, இரவு முழுவதும் வைத்திருப்பது நல்லது.

எண்ணெய் அல்லது தண்ணீரில் நீர்த்த டீ ட்ரீ எண்ணெயை எடுத்து முகப்பருக்களில் தடவ வேண்டும்.

தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை கலந்து முகப்பருக்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பிலைப் பசை முகப்பருக்களை குறைக்க உதவும். இந்தப் பசையை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும்.

ஐஸ் க்யூப்ஸ்களுடன் மசாஜ் செய்தால், வீக்கம், சிவந்த தன்மை குறையும். பருக்கள் கூட குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகரும் நல்ல பலனைத் தரும். தண்ணீரில் கலந்து பஞ்சு உருண்டையால் பருக்கள் மீது தடவ வேண்டும்.

பச்சை தேநீரை(க்ரீன் டீ) தவறாமல் குடிப்பதோடு மட்டுமல்லாமல், ஐஸ் க்யூப்ஸாக செய்து முகத்தில் தடவினால் நல்லது.

முகப்பருக்களை ஒருபோதும் நசுக்கக் கூடாது. இயற்கையாகவே குறையும் வரை காத்திருக்க வேண்டும்.

இவைகளை செய்த பிறகும் முகப்பருக்கள் வந்தால், மருத்துவ உதவி பெறுவது நல்லது.