மேலும் அறிய

உலகிலேயே முதன்முறை! தன்பாலின உறவாளர்களுக்கும் பிரான்ஸ் உறுதிப்படுத்திய உரிமை தெரியுமா?

பிரான்ஸ் நாட்டின் LGBT கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் மாத்யூ கேபிட்டன், ”நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த முன்னேற்றம் நிறைவேறியுள்ளதை வரவேற்கிறோம். இது எங்களுக்கு திருப்தியளிக்கிறது” என்று கூறினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிப்பதில் சிலபல நேரங்களில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளை சற்று விஞ்சி நிற்கின்றன என்று சொல்லலாம்.

அப்படியொரு நீதியை நிலைநாட்டும் சட்டத்தை பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற கீழவை நிறைவேற்றியிருக்கிறது. தனித்து வாழும் பெண்கள், தன்பாலின உறவு கொள்ளும் பெண்கள் மருத்துவ உதவியுடன் கருத்தரிக்க ஏதுவாக ஒரு சட்டத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த சட்டத்தை பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தில் கீழவையில் 326 சாதக ஓட்டுக்களையும், 115 எதிர் ஓட்டுக்களையும் பெற்று நிறைவேறியுள்ளது. LGBT லெஸ்பியன் கே பைசெக்ஸுவல் ட்ரான்ஸ்ஜெண்டர் ரைட்ஸ் எனப்படும் தன்பாலின உறவாளர்கள் உரிமைக் குழுவினரால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இச்சட்டம் நிறைவேறியிருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2013ம் ஆண்டு பிரான்ஸ் தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்நிலையில், தற்போது செயற்கை கருத்தரித்தல், ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருத்தரித்தல் ஆகியனவற்றை தன்பாலின உறவாளர்களுக்கும் வழங்க சட்டப்பூர்வ வழிவகை செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கருத்தரித்தலுக்கான சிகிச்சை முற்றிலும் இலவசம். இப்போது இந்த உரிமை தன்பாலின உறவாளர்கள், தனியாக வாழும் பெண்களுக்கும் கிடைக்கும்.

இது குறித்து சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரான் கூறும்போது, இந்தச் சட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமல்படுத்தவிருக்கிறோம். அப்போதுதான், முதல் குழந்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் கருவாகச் செய்ய இயலும் என்றார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாகவே காரசாரம் விவாதம் நடந்துவந்த நிலையில் தற்போது சட்டம் நிறைவேறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் LGBT கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ கேபிட்டன் இது குறித்து, நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த முன்னேற்றம் நிறைவேறியுள்ளதை வரவேற்கிறோம். இது எங்களுக்கு திருப்தியளிக்கிறது. ஆனால், இந்த சட்டம் பிறந்த கதைதான் சற்று வலி மிகுந்தது என்று நெகிழ்ச்சி பொங்க கூறினார். பிரான்ஸ் நாட்டில் தனித்து வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. இங்கு தனித்து வாழும் பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்ததால் அவர்கள் ஒன்று தங்களின் விருப்பத்தைத் தள்ளிப் போட வேண்டியிருந்தது, இல்லை மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது புதிய சட்டம் எல்லாவற்றிற்கும் தீர்வைத் தந்துள்ளது. இருப்பினும் வாடகைத் தாய் தடைக்கு இந்தச் சட்டம் எவ்வித தீர்வையும் தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரான்ஸைப் போல் ஓரினச் சேர்க்கையாளர்கள்  திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
ICC Chairperson Jay Shah:  ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
"பணிகள் தடைபடக்கூடாது! அமெரிக்கா சென்றாலும் தமிழ்நாடு பற்றியே சிந்தனை" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supreme Court bail to BRS Kavitha : ”அந்த ஒரு நாள்...”காத்திருந்த கவிதா நீதிமன்றம் தந்த SURPRISE!Kolkata Doctor Case : கலவரமான நீதி போராட்டம்.. மம்தாவின் MOVE என்ன? பதற்றத்தில் மேற்குவங்கம்Trichy Railway station|ஓடும் ரயிலில் இறங்கிய நபர் நொடிப்பொழுதில் விபரீதம்.. ஜங்சனில் திக் திக்Rahul gandhi marriage | ”MARRIAGE ப்ளான் என்ன?” வெட்கப்பட்ட ராகுல்! விடாத மாணவிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
ICC Chairperson Jay Shah:  ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
"பணிகள் தடைபடக்கூடாது! அமெரிக்கா சென்றாலும் தமிழ்நாடு பற்றியே சிந்தனை" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Toll Fee Hike: செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு?  - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு? - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
Embed widget