மேலும் அறிய

Watch Video: ‛வானத்தைப்போல’ வானில் நடந்த சம்பவம்... பயணிகள் தலையில் கழன்று விழுந்த விமான பாகம்!

ஒரு சிறு கீறல் வந்தால் கூட அதை முழு சோதனைக்கு உட்படுத்தும் நிர்வாகங்கள், இது மாதிரி, ‛டோப்பா’ கழன்று விழும் அளவிற்கு சூழல் ஏற்படும் அளவிற்கு அலட்சியம் காட்டியது எப்படியோ? 

‛பறவையை கண்டான்... விமானம் படைத்தான்...’ என பாடி, விமான கண்டுபிடிப்பை நாம் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாருங்கள், விமானங்கள் சில நேரங்களில், நம்மூர் டவுன் பஸ்ஸை விட மோசமான நிலைக்கு வந்துவிடுகிறது. உச்சபட்ச ஆடம்பர போக்குவரத்தாக பார்க்கப்படும் விமான போக்குவரத்தில், பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆனால், அது விமானத்தின் வெளியே நடைபெறும் சூழலில் மட்டுமல்ல, விமானத்தின் உள்ளேயும், நடக்கும் போது தான், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 

இப்போது நாம் பார்க்கும் இந்த விமானத்தில், அனைத்து சீட்டுகளும் நிரம்ப, பயணிகளோடு நடுவானில் பறந்து கொண்டிருக்கிறது. திடீரென விமான மேல் பாகம் ஒன்று, பயணிகள் மீது கழன்ற விழுகிறது. விமானத்தை நிறுத்திவிட்டு அதை பொருத்த முடியாது. விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, அதை சரி செய்வது என்பதும் நடக்காத காரியம். 

வேறு என்ன செய்வது, ‛வானத்தைப் போல’ விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜயகாந்த போல, அந்த பாகத்தை கைகளால் ஏந்திய படி பயணித்திருக்கிறார்கள் அந்த பயணிகள். எஸ்.ஏ.ராஜ்குமார் இருந்திருந்தால், அதற்கும் பின்னணி இசை அமைத்திருப்பார். அந்த அளவில் தான், அந்த சம்பவத்தை பார்க்கும் போது இருந்தது. விமானத்தில், ஒரு சிறு கீறல் வந்தால் கூட அதை முழு சோதனைக்கு உட்படுத்தும் நிர்வாகங்கள், இது மாதிரி, ‛டோப்பா’ கழன்று விழும் அளவிற்கு சூழல் ஏற்படும் அளவிற்கு அலட்சியம் காட்டியது எப்படியோ? 

‛உங்க விமானத்தில் வந்து ஒரு குத்தமாடா...’ என்பதைப் போல, காசு கொடுத்து பயணித்தவர்கள், கை வலிக்க , அந்த பாகத்தை தாங்கிய படி தங்கள் பயணத்தை முடித்தனர். இதை விமானங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் தனியார் அமைப்பு ஒன்று, இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதில் விசேசம் என்னவென்றால், இது போல் அனுபவம் பலருக்கு இருந்திருக்கும் போல, ‛இது அந்த விமான நிறுவனம் தானே?’ என்று , கிண்டலடித்து சிலர் பதில் பதிவு போட்டு வருகின்றனர். 

‛ஆமாம்... விமானத்தில் குளிர்பானங்கள், டீ, காபி கொடுத்திருப்பார்களே... பாவம் இந்த பயணிகள் அதை எப்படி தங்கள் கைகளால் வாங்கி பருகி இருப்பார்கள்?’ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. என்ன செய்ய, தங்கள் பயணிகளுக்கு இலவச உடற்பயிற்சி வழங்கிய இந்த விமான சேவையை , சக பயணிகள் வஞ்சப்புகழ்ச்சியாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது, எந்த விமானத்தில் நடந்தது என்கிற தகவலை அவர்கள் பதிவிடவில்லை. அதே நேரத்தில், இதை சீரியஸாகவும் அவர்கள் எடுக்கவில்லை. காமெடியாக பகிர்ந்தாலும், விசயம் என்னவோ, நம்மைப் பொருத்தவரை சீரியஸ் தான். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
Embed widget