மேலும் அறிய

Chimpanzees Kidnapped : சிம்பன்சி குரங்குகள் கடத்தல்..! பணம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்..! எங்கு நடந்தது இந்த விநோதம்..?

இந்த குரங்குகள் உயிருடன் வேண்டுமானால் நாங்கள் கேட்ட தொகை வேண்டும் என சினிமா பாணியில் கடத்தல்காரர்கள் மிரட்டியிருக்கிறனர்.

இந்த உலகம் இன்னும் எத்தனை விந்தைகளையும் விநோதங்களையும் சந்திக்க போகிறது தெரியவில்லை. மனிதர்களை கடத்தி , கொலை செய்வதாக மிரட்டி பணம் சுருட்டும் கும்பல்களை தினம் தினம் செய்திகள் வாயிலாகவும் , சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் பார்த்திருப்போம் படித்திருப்போம். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக மூன்று குரங்கு குட்டிகளை கடத்தி  அவைகளின் உரிமையாளரிடம் பணம் கேட்டு  மிரட்டும் சில விசித்திரர்கள் களமிறங்கியுள்ளனர்.

Chimpanzees Kidnapped : சிம்பன்சி குரங்குகள் கடத்தல்..! பணம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்..! எங்கு நடந்தது இந்த விநோதம்..?
காங்கோ ஜனநாயக குடியரசின் கடங்கா பகுதியில் young Animals Confiscated என்னும் பெயரிலான விலங்குகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ஐந்து சிம்பன்சி குரங்குகளை மீட்டு , அவற்றை முறையாக பராமரித்து வருகிறார் அதன் நிறுவனர் Franck Chantereau. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி , அதிகாலை 3 மணியளவில் சரணாலய கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் , அங்கிருந்த ஐந்து சிம்பன்சிக்களில் சர், ஹுசைன் மற்றும் மோங்கா என்ற பெயர் கொண்ட மூன்று குரங்குகளை கடத்தி சென்றுள்ளனர்.

மற்ற இரண்டு குட்டிகள் அங்கிருந்த சமையல் அறையில் இருந்து மீட்கப்பட்டத்தாக , சரணாலய உரிமையாளர் ஃபிராங் தெரிவிக்கிறார். குரங்குகளை கடத்திச்சென்ற ஒரு மணி நேரத்தில் கடத்தல்காரர்களிடமிருந்து கடத்தப்பட்ட சிம்பன்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஃபிராங்கின் மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் இந்த குரங்குகள் உயிருடன் வேண்டுமானால் நாங்கள் கேட்ட தொகை வேண்டும் என சினிமா பாணியில் மிரட்டியிருக்கிறனர். அதோடு குரங்கு குட்டிகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் ஃபிராங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் கேட்ட அவ்வளவு பெரிய தொகையை எங்களால் கொடுக்க இயலாது. எங்களிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, நாங்கள் அவர்களுக்கு பணம் கொடுத்தால் இதே சம்பவத்தை அடுத்த இரண்டு மாதங்களில் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது. நாங்கள் பணத்தை கொடுத்தால் , இங்குள்ள 23   சரணாலயங்களுக்கு நாளை இதே நிலைதான் இருக்கும். பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துவிடும் . நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் குரங்குகள் உயிருடன்தான் இருக்கின்றன. அவைகளை விரைந்து மீட்க வேண்டும் “ என்றார். இது குறித்து DRC இன் சுற்றுச்சூழல் அமைச்சரின் ஊடக ஆலோசகர் Michel Koyakpa கூறியபோது “ இது போன்ற செயலுக்கு ஒருபோது அடி பணிய மாட்டோம். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் .இயற்கைக்கு மாறானது" என்றார்.

Chimpanzees Kidnapped : சிம்பன்சி குரங்குகள் கடத்தல்..! பணம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்..! எங்கு நடந்தது இந்த விநோதம்..?

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் , குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மாதிரியான கடத்தல் சம்பவம் இதுவே முதல் முறை என்றாலும், ஃபிராங்கின் சரணலாயம் குறி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. சாண்டேரோவின் சரணாலயம் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2006 இல் சரணாலயம் நிறுவப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு குழு இரவில் நுழைந்து குழந்தை சிம்ப்ன்சி தூங்கும் இடத்திற்கு தீ வைத்தது. அதில் இரண்டு குரங்குகள் தீக்கிரையாகின. அதே போல 2013 செப்டம்பரில் சரணாலயத்தின் கல்வி மையம் சிலரால் தீ வைக்கப்பட்டது. ஆனால் அப்போது எந்த உயிரிழப்பும் இல்லை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget