Sundar Pichai: என்னதான் பிரச்னை? கூகுள் சுந்தர் பிச்சைக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ்.!
Sundar Pichai Contempt Notice: டெல்லி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு , மும்பை நீதிமன்றமானது, அவமதிப்பு நோட்டீசை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி மீது மும்பை நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது? வழக்கு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
என்ன பிரச்னை?:
தியான் என்ற அறக்கட்டளை நிறுவனமானது, டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு எதிராக, யூடியூப்பில் வீடியோவானது பதிவிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதுதான் , பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியான் அறக்கட்டளை சார்பில் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் , எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யூடியூப்பில் வீடியோவானது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை நீக்க வேண்டும் என என உத்தரவிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வீடியோவை நீக்குமாறும் யூடியூப் நிறுவனத்திற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வீடியோவை நீக்க மறுத்த யூடியூப்
இதனை தொடர்ந்து, யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது” தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் , அவதூறு தொடர்பான வீடியோக்களை பிளாக் செய்ய தேவையில்லை. இதுபோன்ற வழக்கை , சிவில் நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும், குற்றவியல் நீதிமன்றம் இல்லை என்றும் தெரிவித்தது.
ஆனால், “ இதுபோன்ற வழக்கை கிரிமினல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது என சட்டத்தில் இல்லை, இந்த வீடியோவால் பொது அமைதியில் பாதிப்பு ஏற்படலாம் எனவும்” நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வீடியோவானது நீக்கப்படவில்லை.
மீண்டும் வழக்கு
இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் அறக்கட்டளை சார்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வீடியோவை நீக்காததையடுத்து, கூகுள் நிறுவனத்திற்கு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு , அவமதிப்பு நோட்டீசை , மும்பை நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையானது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் டாப் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

