England | காதலி வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டே ரூ.1000 கோடி சம்பாதித்த இளைஞர்!
லாக்டவுன் என்னவெல்லாம் செய்தது?! என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சாட்சி. கொரோனாவால் உலகம் முதன்முறையாக மாஸ் ஊரடங்கைக் கண்டது. எல்லோருக்குமே அது புதிதாகத் தான் இருந்தது.
லாக்டவுன் என்னவெல்லாம் செய்தது?! என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சாட்சி. கொரோனாவால் உலகம் முதன்முறையாக மாஸ் ஊரடங்கைக் கண்டது. எல்லோருக்குமே அது புதிதாகத் தான் இருந்தது.
லாக்டவுன் உலகளவில் இணைத்த மனங்கள் நிறைய, பிரித்த உறவுகளும் நிறைய. உழைத்து உயர்ந்தவர்களும் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலையை இழந்தவர்களும் உள்ளனர்.
இப்படி ஒரு விநோத செய்தி தான் இதுவும்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட். இவர் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு எப்போதுமே தனியாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும். அதை மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வேலைக்குச் செல்ல வீட்டுக்கு வர என ஐடி வேலையின் நேரக் கெடுபிடி நெருக்கடியாக இருந்தது.
அப்போதுதான் உலகம் ஊரடங்கைக் கண்டது. திடீர் ஊரடங்கு அறிவிப்பு. ஜானி தனது காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டார். கண்ணா லட்டு திண்ண ஆசையா என்று ஜானி இருந்துவிடவில்லை.
ஆஹா நேரம் கிடைத்துள்ளது. இதுதான் தருணம் என்று தான் விரும்பிய செயலியை டெவலப் செய்ய ஆரம்பித்தார். நேசிப்பவர்கள் அருகில் இருந்தால் ஊக்கம் தானாகவே ஊற்றெடுக்கும் அல்லவா?
அதனால் தான் ஜானியும் புதிய உத்வேகத்துடன் தனது செயலியை வடிவமைக்கத் தொடங்கினார். அந்த ஆப்பிற்கு ஹோபின் (Hopin) என பெயரிட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஆப்பை அவர் ரிலீஸ் செய்த நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை அந்த அப்பை சுமார் 50 லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அடடா உள்ளூர் பணக்காரர் ஆனார்..
அது மட்டுமா நடந்தது? ஜானி உருவாக்கிய இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதன் காரணமாக தற்போது ஜானி இங்கிலாந்து நாட்டின் 113-வது பணக்காரராக மாறியுள்ளார்.
காதலி வீட்டின் படுக்கைய அறையில் உருவாக்கிய ஆப்பின் சில பங்குகளை ஜானி சில நாட்கள் முன்பு விற்று இந்திய மதிப்பில் சுமார் ரூ.1000 கோடி சம்பாதித்துள்ளார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தில் எந்த லாக்டவுனின் போது நடந்தது என்ற விவரம் இல்லாவிட்டாலும் இனி லாக்டவுன் என்று வந்தால் இப்படி ஆக்கப்பூர்வமாக கால நேரத்தைப் பயன்படுத்தலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இச்செய்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்