World Richest Person: "யாருக்கிட்ட என்கிட்டயேவா" எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ் - உலகின் முதல் பணக்காரர் யார்
உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார்.
World Richest Person: உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார்.
உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய ஜெஃப் பெசோஸ்
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.
திங்களன்று டெஸ்லா பங்குகள் சுமார் 7.2 சதவீதம் சரிந்தபோது எலோன் மஸ்க் தனது நிகர மதிப்பில் கணிசமான தொகையை இழந்தார். எலான் மஸ்க் தற்போது 197.7 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலருடன் முதல் இடத்தில் உள்ளார்.
டெஸ்லா பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அமேசான் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக எலோன் மஸ்க் மற்றும் பெசோஸ் இடையேயான இடைவெளியைக் குறைத்து வருகிறது. ஒரு கட்டத்தில், எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் இடையேயான நிகர மதிப்பின் வித்தியாசம் 142 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
- ஜெஃப் பெசோஸ் (200 பில்லியன் டாலர்)
- எலான் மஸ்க் (198 பில்லியன் டாலர்)
- பெர்னார்ட் அர்னால்ட் (197 பில்லியன் டாலர்)
- மார்க் ஜுக்கர்பெர்க் (179 பில்லியன் டாலர்)
- பில் கேட்ஸ் (150 பில்லியன் டாலர்)
- ஸ்டீவ் பால்மர்(143 பில்லியன்டாலர்)
- வாரன் பஃபெட்(133 பில்லியன் டாலர்)
- லாரி எலிசன் (129 பில்லியன்டாலர்)
- செர்ஜி பிரின் (116 பில்லியன்டாலர்)
- லாரி பைஜ் (122 பில்லியன்டாலர்)
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11ஆம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 14ஆம் இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 108 பில்லியன் டாலரும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 95 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Thirumavalavan: தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலை சிறுத்தைகள் போட்டி - திருமாவளவன் அதிரடி!