(Source: ECI/ABP News/ABP Majha)
Thirumavalavan: தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலை சிறுத்தைகள் போட்டி - திருமாவளவன் அதிரடி!
Thirumavalavan: தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்களவைத்தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தென்னிந்திய மாநிலங்களின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநிலத்தலைவர்கள், பொறுப்பாளர்கள்,பொதுச்செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் பலரும் இன்றைய கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆந்திரா மாநில தலைவர் வித்யாசகர், பொதுச்செயலாளர் சிவ பிரசாத், தெலங்கானா மாநிலத்தலைவர் ஆகியோரும் பங்கேற்றி கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திராவில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக விடம் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வலியுறுத்தி தென்மாவட்டங்களில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Justice Abhijit Gangopadhyay: ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு - ஏன் ராஜினாமா? நடந்தது என்ன?
மேலும் படிக்க: வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய துரைமுருகன் - என்ன பேசினார்?