Eiffel Tower: 10 நிமிடத்தில் உயரம் கூடிய ஈஃபிள் கோபுரம்... எப்படி தெரியுமா?
இந்த வரலாற்று நிகழ்வால் ஈஃபிள் கோபுரம் இன்று டிரெண்டிங்கில் உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் அந்த ரேடியா ஆண்டெனா ஈஃபிள் கோபுரத்தின்மீது பொருத்தப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தின் உயரம் 6 மீட்டர் கூடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈஃபிள் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம், உலக புகழ் பெற்றது. உலகெங்கிலும் இருந்து மக்கள் ஈஃபிள் கோபுரத்தை காண படையெடுத்து வருவது வழக்கம். தனி அழகு வாய்ந்த ஈஃபிள் கோபுரத்தின் மேலே, புதிய டிஜிட்டல் ரேடியோவின் ஆண்டெனா வைக்கப்பட்டிருப்பதால், அதன் நீளம் 324 மீட்டரில் இருந்து 330 மீட்டராக உயர்ந்திருக்கிறது.
🇬🇧 I haven't stopped growing since 1889! Today we celebrate a new historic chapter: the installation of a new antenna that makes me grow from 324 meters to 330 meters!
— La tour Eiffel (@LaTourEiffel) March 15, 2022
📷 SETE / TDF - @clguillaume #tourEiffel330M pic.twitter.com/euFmhUVQtv
இந்த வரலாற்று நிகழ்வால் ஈஃபிள் கோபுரம் இன்று டிரெண்டிங்கில் உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் அந்த ரேடியா ஆண்டெனா ஈஃபிள் கோபுரத்தின்மீது பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டெனா பொருத்தப்பட்டதனால், பாரீஸ் நகரத்தில் உள்ள 30 டிஜிட்டல் டிவி சேவைகளையும், 32 ரேடியோ சேவைகளையும் சீராக பெற முடியும்.
வீடியோவைக் காண:
🇬🇧 A helicopter was used to transport the antenna to the technicians in charge of installing it at a height of 324m 👷 A rare and spectacular technical feat! #tourEiffel330M @TDFgroupe pic.twitter.com/9qytcpAeiT
— La tour Eiffel (@LaTourEiffel) March 15, 2022
10 நிமிடங்களுக்குள் இந்த ஆண்டெனா செட் செய்யப்பட்டுவிட்டதாக பாரீஸில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்