Congo : காங்கோவில் பதற்றம்...அலறிய மக்கள்...பயங்கரவாத தாக்குதலால் 22 பேர் பலி!
காங்கோவில் பயங்கரவாத தாக்குதலால் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Congo : காங்கோவில் பயங்கரவாத தாக்குதலால் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு தான் காங்கோ. காங்கோவில் அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதனை அடுத்து, பயங்கரவாத தாக்குதலால் படுகாயமடைந்த சிலரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் , பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Suspected militants killed at least 22 people in a string of attacks across Democratic Republic of Congo's eastern Ituri and North Kivu provinces, Reuters reported citing officials and activists
— ANI (@ANI) March 19, 2023
இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் இருக்கின்றன. இதனால் காங்கோவில் உள்ள பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளை ஒழிக்கும நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பயங்கரவாத தாக்குதலால் 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க