மேலும் அறிய

Amazon Layoff: இது விடாது கருப்பு.. மேலும் 9 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கும் அமேசான்.. காரணம் இது தான்

அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அமேசான் அறிவிப்பு:

பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்நுட்ப உலகில்  முக்கிய பங்கு வகிக்கும் அமேசானில் இருந்து அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 வேலைகள் குறைக்கப்பட உள்ளது. புதிய பணிநீக்கங்கள் பெரும்பாலும் Amazon Web Services அல்லதுAWS, Amazon People experience மற்றும் Technology, விளம்பரம் மற்றும் வீடியோ கேமர்களுக்கான லைவ் ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களை தான் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த சில வாரங்களில் ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட 9000 பேர் அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமேசான் நிறுவனம் முன்னெடுக்கும் இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும்.

காரணம்:

”நிச்சயமற்ற பொருளாதாரம்" மற்றும் "விரைவான பணியமர்த்தல்" ஆகிய காரணங்களால், செலவினங்களை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

18,000 பேரை பணிநீக்கம் செய்த அமேசான்:

முன்னதாக, கடந்த ஆண்டு பிற்பகுதியில் வெளியான அறிவிப்பின்படி, கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் பணியிடங்களை அமேசான் நிறுவனம் குறைத்தது. ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாபெரும் பணிநீக்க நடவடிக்கை காரணமாக, அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தன.  இதனால் அதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 675 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.5,540 கோடியை இழந்தார். இந்நிலையில், வெறும் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் நிறுவனம் எடுத்துள்ளது. 

மெட்டா அதிரடி:

இதனிடையே, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று  ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000  பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி நிறுவனம் முடிவு:

இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.  ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Embed widget