மேலும் அறிய

Crime: தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட பெண்ணை கொலை செய்த மாடல்..! இன்ஸ்டாகிராம்தான் காரணம்..! பகீர் பின்னணி

ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை போன்று இருந்த மற்றொரு பெண்ணை, இன்ஸ்டாகிராம் மூலம் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காணாமல் போன அழகுக்கலை நிபுணர்:

ஜெர்மனியின் முனிச் பகுதியில் வசித்து வந்த 24 வயதான அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி சமூக வலைதளங்களில் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்தான இவர்,  ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில்,  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு ஷஹ்ரபான் வீட்டில் இருந்து சென்றார்.

அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேட தொடங்கியுள்ளனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் இடங்கள் என எங்கு தேடியும், ஷஹ்ரபான் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளனர்.  அதனடிப்படையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியன்று இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்தனர். 

காரில் கிடந்த பிணம் 

அந்த காருக்குள் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தார். உடல் வாகு, அதிகப்படியான சிகை அலங்காரம் மற்றும் நீளமான முடி ஆகிய காரணங்களை கொண்டு,  காருக்குள் கிடந்தது ஷஹ்ரபான் தான் என அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீசாரும் அதை நம்பி,  காரில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

பிரேத பரிசோதனையில் உண்மை அம்பலம்:

போலீசாரின் விசாரணைக்கு மத்தியில் வெளியான உடற்கூறய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதன்படி, காருக்குள் இருந்து கைப்பற்றப்பட்டது ஷஹ்ரபான் உடல் அல்ல என்பதும், ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ (23) என்பதும் தெரியவந்தது. கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் மூலம் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

துப்பு துலங்கியது

இதனால் குழம்பிய போலீசார் தேடுதல் பணியை தீவிரமாக்கி, தலைமறைவாக இருந்த ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் கே ஆகியோரை அடுத்த இரண்டு நாட்களில் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனிடையே, ஷஹ்ரபானின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கி, பலருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

திடுக்கிடும் தகவல்கள் 

அதுகுறித்து கைதான நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ”மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க திட்டமிட்டார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த தனது காதலரையும் அவர் கூட்டு சேர்த்துக்கொள்ள,  இருவரும் சேர்ந்து ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிவந்தனர். இதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை தொடங்கி தன்னை போன்ற பெண்ணை தேடி, அவர்களுடன் பேசவும் தொடங்கியுள்ளார். இந்த சூழலில்தான், அப்போதுதான் மாடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார். கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான், அவ்வப்போது அழகுசாதன பொருட்களையும் வாங்கிக் கொடுத்து நெருக்கத்தை அதிகரித்துள்ளார்.

முகத்தில் 50 முறை குத்திக் கொலை:

அந்த வகையில் கொலை நடந்த தினத்தில் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை,  ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்றனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர். முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துள்ளனர். பின்பு அங்கிருந்து தப்பி ஓடியது அம்பலமாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget