28 பெண்கள்... 18 குழந்தைகள்: வங்கதேச படகு விபத்தில் தொடர்ந்து 61 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..
வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு பங்காளதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து பக்தர்களை ஏற்றி சென்றபோது படகு மூழ்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்ட பொழுதிலும் பயணிகள் நீரில் மூழ்கினர். நேற்று வரை 61 உயிரிழந்தாகவும், அதில் 28 பெண்களும், 18 குழந்தைகளின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டதாகவும் விபத்து நடந்த பஞ்சகரின் வடக்கு மாவட்ட தலைமை நிர்வாகி ஜஹீருல் இஸ்லாம் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து 5 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது. இவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பக்தர்களை ஏற்றி சென்ற படகு அதன் கொள்ளளவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஏற்றி சென்றதாக தெரிவித்தனர்.
படகு மூழ்கும்போது சில பயணிகள் கரைக்கு நீந்தி சென்றதாகவும், அதில் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், 10 பேரின் நிலைமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை என்றும், அந்த படகில் சுமார் 80 பேர் வரை பயணம் செய்ததாகவும் விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
துர்கா பூஜை பங்களாதேஷிலும் கிழக்கு இந்தியாவிலும் மிகப்பெரிய இந்து பண்டிகையாகும். பங்களாதேஷில் படகு மற்றும் படகு விபத்துக்களில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். முன்னதாக கடந்த மே மாதம், அதிக அளவில் பயணித்த வேகப் படகு, மணல் ஏற்றிய மொத்த கேரியரில் மோதி பத்மா நதியில் மூழ்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசமும் படகு விபத்துகளும்:
வங்கதேசத்தில் படகு விபத்து நடைபெறுவது இது முதன்முறை அல்ல. இதுபோன்ற பல முறை விபத்துகள் நடந்திருக்கின்றன. காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனம் மற்றும் பணத்துக்காக அதிகளவில் பயணிகளை ஏற்றுவதே ஆகும்.
வங்கதேச நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் ஆறுகளில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏழைகள் மத்தியில் படகுப் பயணம் ஒரு முன்னணி போக்குவரத்து வழிமுறையாகும். இந்நாட்டில் படகு விபத்துக்கள் பொதுவானவையாகும். கூட்ட நெரிசல், மோசமாக பராமரிக்கப்படும் கப்பல்கள், மோசமான பணியாளர் பயிற்சி மற்றும் அரசாங்க மேற்பார்வையின்மை ஆகியவற்றால் அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கின்றன என்று பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது.