South Africa: தென்னாப்பிரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு..
தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி உயிரிழ்ந்த 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
LATEST!!!!
— syde (@DylanJames167) August 31, 2023
Burning building in Albert and Delvers Street , Marshalltown, Johannesburg ,Joburg CBD Building was originally a Hospital back in the days but now illegally occupied by South African residents and foreign nationals#earthquake #SouthAfrica #JoburgUpdates pic.twitter.com/BdgDBYmZzk
தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று அதிகாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பலரும் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பெருமளவில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Live: Oversight briefing with Mayor @KabeloGwamanda and Legislature Principal Heads. #JoburgCBD @CityofJoburgZA pic.twitter.com/pfMKJzRxDM
— Colleen Makhubele (@ColleenMakhub) August 31, 2023
Executive Mayor, @KabeloGwamanda and City Manager, Floyd Brink, accompanied by MEC for Human Settlements, @LebogangMaile1, Speaker of Council, @ColleenMakhub and CoJ MMCs are at the #JoburgCBDFire site where search and rescue missions started a few hours ago and are currently… pic.twitter.com/QDw4F8Lgfd
— City of Joburg (@CityofJoburgZA) August 31, 2023
விபத்து நடந்த பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடங்கள் பல இருப்பதாகவும், இதனை சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக அளவு மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தீ தற்போது பெரும்பாலும் அணைக்கப்பட்டுள்ளதால் உடல்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.