Video : பன்றிக்குட்டியை தத்தெடுத்துக்கொண்ட பசுக்கள்.. இந்த கதையை கொஞ்சம் கேளுங்க..
அந்த காட்டுப்பன்றியின் குட்டி , அருகில் உள்ள ஆற்றைக்கடக்கும் பொழுது , அதன் கூட்டத்திலிருந்து தொலைந்து போயிருக்கலாம் என்கிறார் பசுக்களின் உரிமையாளர்.
![Video : பன்றிக்குட்டியை தத்தெடுத்துக்கொண்ட பசுக்கள்.. இந்த கதையை கொஞ்சம் கேளுங்க.. Cows adopt lost wild boar piglet, their pics together will melt your hearts Video : பன்றிக்குட்டியை தத்தெடுத்துக்கொண்ட பசுக்கள்.. இந்த கதையை கொஞ்சம் கேளுங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/e7805350c20791861aef8d237258d7d51664783336779224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனிதர்களுக்கு மட்டும்தான் மனிதாபிமானம் , அன்பு எல்லாம் இருக்கிறது என மனிதனே நம்பிக்கொண்டிருப்பதுதான் , வேடிக்கையாகவும், இயற்கை அழிவுக்கான முதல்படியாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தகர்க்க அவ்வப்போது விலங்குகளும் சில பாடங்களை புகட்டத்தானே செய்கின்றன. அப்படியான சுவார்ஸ்ய தொகுப்புதான் இது. ஜெர்மெனியில் காட்டிலிருந்து வழி தடுமாறி வந்த பன்றிக்குட்டி ஒன்றை , பசுக்கள் தத்தெடுத்து குழந்தை போல பாவிக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானாய் சேர்ந்த பன்றிக்குட்டி
ஜெர்மெனியில் உள்ள மாட்டு மந்தை ஒன்றிற்குள் பன்றிக்குட்டி ஒன்று வழி தடுமாறி வந்துவிட்டது. மூன்று வாரங்களுக்கு முன்பு வந்த அந்த பன்றிக்குட்டி மாடுகளுடன் இயல்பாக இருப்பதை அந்த மந்தையின் உரிமையாளரும் , விவசாயியுமான ஃபிரெட்ரிக் ஸ்டேபெல் கண்டிருக்கிறார். அந்த காட்டுப்பன்றியின் குட்டி , அருகில் உள்ள ஆற்றைக்கடக்கும் பொழுது , அதன் கூட்டத்திலிருந்து தொலைந்து போயிருக்கலாம் என்கிறார் பசுக்களின் உரிமையாளர்.
பன்றிக்குட்டிகள் , பசுக்களுக்கு ஆபத்தனாவைதானே அதனை எப்படி , அவைகளுடன் சுற்றித்திரிய அனுமதிக்கிறீர்கள் என உரிமையாளர் ஃபிரெட்ரிக் ஸ்டேபெலிடம் கேட்ட பொழுது , பசுக்களுக்கு காட்டுப்பன்றிகள் ஆபத்தானவை எனக்கு தெரியும் . ஆனால் இந்த விலங்கை விரட்ட எனக்கு மனது வரவில்லை. குளிர்காலம் தொடங்கவுள்ளது. எனவே பசுக்களின் கொட்டகையில்தான் , பன்றிக்குட்டிகளையும் தங்க வைக்க போகிறேன்.என நம்பிக்கையுடன் அதன் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார் ஃபிரெட்ரிக் . மேலும் அவர் காட்டுப்பன்றிக்குட்டிக்கு ஃப்ரீடா என பெயர் வைத்துள்ளார். ஃப்ரீடாவை உள்ளூர் வாசிகள் மற்றும் வேட்டைக்காரர்கள் சுடக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் பசுக்களின் கூட்டத்திற்கு நடுவில் , ஒரு காட்டுப்பன்றியை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஹார்ட் எமோஜிக்களை பறக்கவிட்டு வருகின்றனர். பசுக்களும் தங்களுள் ஒருவரை போல அந்த பன்றிக்குட்டியை ஆதரித்து வைத்திருப்பது க்யூட்னஸ் ஓவர்லோடட்தானே !
நாயை காப்பாற்றிய டால்ஃபின் :
இதே போல கடலில் தத்தளித்த நாய் ஒன்றை டால்ஃபின் ஒன்று காப்பாற்றிய சம்பவமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.உலகின் தன்னலமற்ற உயிரினங்களில் என்றுமே டால்ஃபின்கள் முதலிடம் பிடிப்பவை. கடல் பிராணியான டால்ஃபின்கள் பெரும்பான்மை மக்களுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாதவை என்றாலும், டால்ஃபின்களின் வீடியோக்கள் பார்வையாளர்களை குதூகலப்படுத்த தவறியதே இல்லை.அந்த வகையில் முன்னதாக கடலில் தத்தளித்த நாய் ஒன்றை மீட்டு மீண்டும் படகில் விட்ட டால்ஃபினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dolphin saves a dog that fell into the sea from the boat pic.twitter.com/MAinKChfSn
— Gabriele Corno (@Gabriele_Corno) September 29, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)