Cockroach Beer: கரப்பான் பூச்சி பீர் ரெடி: ஜில்லினு குடிச்சு... ஜல்லுனு போலாமாம்: பாட்டில் ரூ.450 தான்!
உலகின் பெரும்பாலான நாடுகள், தாவர உணவு வகைகளையும் மாட்டிறைச்சி, கோழி போன்ற இறைச்சியையும் உணவாக சாப்பிட்டு வருகின்றனர்.
உலகின் பெரும்பாலான நாடுகள், தாவர உணவு வகைகளையும் மாட்டிறைச்சி, கோழி போன்ற இறைச்சியையும் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் போன்ற பல நாட்டு மக்களும் பூச்சிகள், ஈக்களை உணவின் ஒரு பகுதியாக சாப்பிடுகின்றனர். இது கேட்பதற்கு அறுவறுப்பாக தோன்றலாம். ஆனால் அது அவர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பூச்சிகளை உண்பது நம்மில் பலருக்கு காட்டுமிராண்டித்தனமானது. ஆனால் ஜப்பானில் பீர் கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் வாங்கும் மதுவில் பூச்சி கிடக்கிறது, எப்படி நாங்கள் இதைக் குடிப்பது என குடிமகன்கள் கொந்தளிக்கும் பல செய்திகளை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் கரப்பான் பூச்சியிலிருந்துதான் பீரே தயாரிக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. நமக்கு முகம் சுழிக்க வைத்தாலும் ஜப்பானியர்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் குடிக்கிறார்கள். இது உடம்புக்கு நல்லது எனவும் மிகவும் ஆரோக்கியமானது எனவும் அந்நாட்டு ‘குடி’மகன்கள் தெரிவிக்கின்றனர்.
'கபுடோகாமா' (kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர், தனிச்சிறப்பு பெற்ற பீர் என கூறப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பீரை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருகின்றனர். ஜப்பானின் இந்த கரப்பான் பூச்சி பீர், Insect Sour அல்லது Konchu Sour என்று அழைக்கப்படுகிறது.
நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளை பிடித்து, அவற்றை வெந்நீரில் வேகவைத்து, பின்னர் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஊற வைக்கின்றனர். பின்னர் அதிலிருந்து எடுக்கும் சாறு, பீராக மாற்றப்படுகிறது. இந்த கரப்பான் பூச்சி பீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்.
ஜப்பானிய சமையல்காரர் ஒருவர் கூறுகையில், “ஆண் தைவானிய கரப்பான் பூச்சி மிகவும் சுவையானது. இவை வேகவைத்து உண்ணப்படுகின்றன. சூப்களுக்கு மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
இந்த பீர் வேறு எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை. தைவானில் மட்டுமே இந்த ஆண் கரப்பான் பூச்சி உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகை கரப்பான் பூச்சியை ஃப்ரைடு ரைஸ் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க : Pak Break India Record : இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!
மேலும் படிக்க : Today Headlines : அதிகரிக்கும் ஒமிக்ரான்.. வருண்சிங்கிற்கு அஞ்சலி... மீண்டும் ஸ்மித்... இன்னும் பல செய்திகள்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்