Christmas Wish : எதுக்காக ஹேப்பி கிறிஸ்துமஸ் சொல்லாம, மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்றோம்னு தெரியுமா?
கிறிஸ்துமஸ் காலம் என்றாலே கொண்டாட்ட காலம் தான். அதனால் கிறிஸ்துவ மக்கள் வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் காலம் என்றாலே கொண்டாட்ட காலம்தான். அதனால் கிறிஸ்துவ மக்கள் வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர். நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை பரிமாறத் தொடங்கிவிட்டனர். ஆனால் என்றைக்காவது நாம் யோசித்திருக்கிறோமா ஏன் நாம் ஹேப்பி கிறிஸ்துமஸ் என்பதற்கு பதிலாக மெர்ரி கிறிஸ்துமஸ் என்று கூறுகிறோம் என்று.
ஆம் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஹேப்பி என்பதை நாம் பிறந்தநாள், திருமண நாள், விடுமுறை நாள், புத்தாண்டு நாட்களுக்காக பயன்படுத்துகிறோம். அதனால் கிறிஸ்துமஸுக்கு பேரின்பத்தைக் குறிக்கும் மெர்ரி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இது பாரம்பரியத்தை பறைசாற்றும் வார்த்தையாகக் கருதப்படுகிறது. இதுதவிர நிறைய கருத்துகள் இருக்கின்றன. ஹேப்பி என்பது ஒரு வித உணர்வு அதே நேரத்தில் மெர்ரி என்பது ஒருவித பழக்கம் என்று கூறப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி..
வாய்வழி விளக்கங்கள் நிறைய இருந்தாலும் வரலாற்று ரீதியாகவும் நிறைய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று பிரிட்டனை சார்ந்தது. 1534ல் லண்டனில் அரசர் ஹென்ரி 8ன் முதலமைச்சர் தாமஸ் க்ராம்வெலுக்கு பிஷப் ஜான் ஃபிஷர் எழுதிய கடிதத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இயேசு கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தார். கடவுளின் தூதர் என்றறியப்படுகிறார். மேற்காசிய பகுதியில் உள்ள பாலஸ்தீனம் நகரில் பிறந்தவர்தான் இயேசு. பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என கூறப்படுகிறது.
இயேசு என்ற சொல் எகிப்தின் மொழி மூலச் சொல். கிறிஸ்துமஸ் முதன் முதலில் கிபி 240 இல் கொண்டாடப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகிறது. மேலும் கிபி 336 இல் ஐரோப்பிய நாடான இத்தாலி ரோம் நகரில் டிசம்பர் 25ஆம் தேதி முதன் முதலில் கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினம் டிசம்பர் 25 ஆம் தேதி என்பததுதான் என்று உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. இது குறித்து புதிய ஏற்பாட்டில் கூட ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஜூலியஸ் ஆஃப்ரிகானஸ் என்ற மதகுரு 221 ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட நிர்ணயித்துள்ளனர்.
இப்படி கிறிஸ்து பிறப்பு குறித்து கிறிஸ்துமஸ் குறித்தும் பல்வேறு சுவாரஸ் தகவல்கள் உள்ளன. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்த்தாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக்க பார்க்கத் தொடங்கினார்கள்.
பாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.