China Plane Crash: சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் மலையில் விழுந்து விபத்து
மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
#BREAKING Plane carrying 133 crashes in China, casualties unknown pic.twitter.com/7BtDX5iKVI
— AFP News Agency (@AFP) March 21, 2022
குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம் குவாங்சிக்கு மேலே “விபத்து” ஏற்பட்டதாக சீன அரசு தொலைக்காட்சி கூறுகிறது. சம்பவத்தின் போது சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 133 பயணிகள் இருந்ததாகவும், அதில் பயணித்த நபர்களின் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது, மீட்பு பணிக்குழு மலைப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
குவாங்சி அவசரகால மேலாண்மைத் துறை ஒரு அறிக்கையில் கூறியது: “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் இருந்து 133 பேருடன் சென்ற போயிங் 737 பயணிகள் விமானம் குவாங்சியில் உள்ள வுஜோவ், டெங் கவுண்டியில் விபத்துக்குள்ளானது மற்றும் மலைத் தீ ஏற்பட்டது.
A China Eastern Airlines aircraft carrying 133 passengers from Kunming to Guangzhou had an "accident" in the region of Guangxi & caused a fire on the mountains. The jet involved in the accident was a Boeing 737 aircraft & the number of casualties wasn't immediately known: Reuters
— ANI (@ANI) March 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்