கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!

கன்னியாகுமரியில் இருந்து நூறு மைல் தொலைவில் சீனா கட்டும் கடற்நகரத்தால் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே கடலுக்குள் சீனா புதிய நகரம் ஒன்றை கட்டத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நகரம் உருவானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழலாம் எனவும் கூறப்படுகிறது. இலங்கை அரசு வல்லரசு நாடான சீனாவிற்கு அடிபணிந்து விட்டதாக இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும்  தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஏழ்மையில் உள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா கடன்களை கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதே பாணியில் இலங்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா தொடங்கி உள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கை அரசு அம்பந்தோட்டா துறைமுகத்தை மேம்படுத்த 1.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வாங்கியது. வாங்கிய கடனை இலங்கையால் முறையாக திருப்பிக்கொடுக்க முடியாததால் அம்பன்ந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனா குத்தகை எடுத்து இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக அபிவிருத்தி செயல்திட்டம் என்ற பெயரில் சீன அரசுக்கு கொழும்பு துறைமுகத்தின் முக்கிய பகுதிகளை கொடுக்க இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 148 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறி உள்ளது. இதனால் இலங்கைக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாக கிடைக்கும் எனவும் 80 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பிரதமரான மஹிந்தா ராஜபக்சேவும் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் கொழும்பு நகருக்குள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் நுழைய முடியாத நிலையை சீனா ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் பகுதியை மேம்படுத்த இந்திய-ஜப்பான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தத்தை சீனாவின் அழுத்தத்தால் இலங்கை ரத்து செய்தநிலையில் கொழும்பு நகரை மேம்படுத்த சீனாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு போர்ட் சிட்டி என்ற பெயரில் ஒரு நகரத்தை கட்டி சீன மக்களை குடியேற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்பதாயிரம் கோடி செலவில் 660 ஏக்கர் பரப்பளவில் அமையும் நகரத்தை சைனா ஹார்பர் இஞ்சினியரிங் கம்பெனி கட்டமைக்கிறது. பெரும் பகுதி கடற்கரைக்குள் அமைக்கப்பட உள்ள இந்த நகரம் கன்னியாகுமரியில் இருந்து நூறு மையில் தொலைவில் அமைகிறது. இந்த நகரம் முழுமை பெற்றால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து என கூறப்படுகிறது. சீனாவின் பட்டுப்பாதை திட்டம் கடல் மற்றும் தரை வழி மார்க்கமாக ஐரோப்பா ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை இணைக்கிறது. இந்த பட்டுபாதை திட்டத்தை நிறைவேற்ற கொழும்பு துறைமுகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை சீனாவிற்கு கூடுதல் பலம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் நெடுந்தீவு உள்ளிட்ட மூன்று தீவுகளுக்கு காற்றாலை அமைக்கும் பணி ஒப்பந்தங்கள் சினோசர் இ-டெக் என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உடன் சீனா தனது உறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்யும் என்றே கூறப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!

இலங்கையை போலவே இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், வங்கதேச துறைமுகங்களையும் மேம்படுத்துவதாக கூறி சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: india Srilanka kanyakumari

தொடர்புடைய செய்திகள்

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

லாக்டவுன் காலம்.. பலான படங்களில் மூழ்கிய இளைஞர்கள்; டேட்டா சொல்வதென்ன?

லாக்டவுன் காலம்.. பலான படங்களில் மூழ்கிய  இளைஞர்கள்;  டேட்டா சொல்வதென்ன?

''எங்க ஊரு டாக்டர் அவரு..'' மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்!

''எங்க ஊரு டாக்டர் அவரு..'' மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்!

Canada Muslim Family Attack: ‛முஸ்லீம் என்பதால் கொன்றேன்’ குடும்பம் மீது லாரி ஏற்றிய இளைஞர் வாக்குமூலம்!

Canada Muslim Family Attack: ‛முஸ்லீம் என்பதால் கொன்றேன்’ குடும்பம் மீது லாரி ஏற்றிய இளைஞர் வாக்குமூலம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Saattai Duraimurugan | யூ-ட்யூப் பதிவர் ’சாட்டை’ துரைமுருகன் கைது!

Saattai Duraimurugan | யூ-ட்யூப் பதிவர் ’சாட்டை’ துரைமுருகன் கைது!

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!