Chile Earthquake : சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு... அலறிய மக்கள்...!
சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![Chile Earthquake : சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு... அலறிய மக்கள்...! Chile Earthquake Magnitude 6.2 earthquake strikes in Chile Chile Earthquake : சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு... அலறிய மக்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/f124aa54d1f1b22252c2bbca3744f5be1680230218917571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Chile Earthquake : சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஓரத்தில் தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு மூலையில் சிலி நாடு உள்ளது. இந்நிலையில் சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டின் சாண்டியாகோவில் 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்டியாகோ நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 328 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
Earthquake of Magnitude:6.2, Occurred on 30-03-2023, 23:03:12 IST, Lat: -35.66 & Long: -73.05, Depth: 10 Km ,Location: Off Coast of Central, Chile for more information Download the BhooKamp App https://t.co/KjUmMKB1mc @Indiametdept @ndmaindia @DDNewslive @Dr_Mishra1966 pic.twitter.com/KZmEbvS1da
— National Center for Seismology (@NCS_Earthquake) March 30, 2023
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சான்டியாகோவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. மேலும், இது பற்றி முழு விவரங்கள் ஏதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “நிலநடுக்கம்: 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சான்டியாகோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை
முன்னதாக,
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூலின் கிழக்கு பகுதியில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)