King Charles III: ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா.. கன்னத்தில் கைவைத்து நின்ற கிங் சார்லஸ் III.. வைரலாகும் பழைய படம்..
1953 ஆம் ஆண்டு தனது தாய் முடிசூட்டும் விழாவில் கன்னத்தில் கைவைத்து நின்ற கிங் சார்லஸ் III-ன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
![King Charles III: ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா.. கன்னத்தில் கைவைத்து நின்ற கிங் சார்லஸ் III.. வைரலாகும் பழைய படம்.. Britain king Charles at 4-year-old his mother Elizabeth II's coronation resurfaces in1953 Pic viral King Charles III: ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா.. கன்னத்தில் கைவைத்து நின்ற கிங் சார்லஸ் III.. வைரலாகும் பழைய படம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/f8f44f4d3672aa3fa2e73a25a786863f1662721273526175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1953 ஆம் ஆண்டு தனது தாய் முடிசூட்டு விழாவில் கன்னத்தில் கைவைத்து நின்ற தற்போதைய கிங் சார்லஸ்-III-ன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
முடிசூட்டு விழா
1953-ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இரண்டாம் எலிசபெத்தின் மகனான சார்லஸ்-க்கு 4 வயதாக இருந்தது. அப்போது, முடிசூட்டு விழாவில் குழந்தையாக இருந்த சார்லஸ் கன்னத்தில் கைவைத்து காணப்பட்டார்.
அப்புகைப்படத்தை, 2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் ராயல் சேகரிப்பு அறக்கட்டளையால் பகிர்ந்திருந்தது. இப்படத்தில் பயனாளர் ஒருவர், குழந்தை சலிப்பாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அப்படத்தில், சார்லஸ் தனது பாட்டிக்கும் அத்தை இளவரசி மார்கரெட்டிற்கும் இடையில் நிற்கிறார்.
View this post on Instagram
ராணி எலிசபெத் மறைவு:
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் யூனிகார்ன் :
ஸ்காட்லாந்தின் பால்மோரலில் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "ஆபரேஷன் யூனிகார்ன்" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ராணியின் மரணம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு இடையேயான முதல் 10 நாட்களில் நிகழ்வுகளை நிர்வகிக்க இங்கிலாந்து அதிகாரிகள் ”ஆபரேஷன் பிரிட்ஜ்” என பெயர் வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால் தற்போது ”ஆபரேஷன் யூனிகார்ன்” பெயரை மாற்றியுள்ளனர்.
அதன் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் வைரல்;
இந்நிலையில் கிங் சார்லஸ் III , 4 வயது குழந்தையாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. குழந்தையாக இருந்த கிங் சார்லஸ்-III, தனது தாய் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில் போரடித்ததால், கன்னத்தில் கை வைத்து சலிப்புடன் காணப்படும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)