Ukraine Russia War: உயிரிழந்த 100க்கும் அதிகமான ராணுவ வீரர்கள்! ரத்த பூமியாகும் உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணிநேரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
#BREAKING | ரஷ்யாவின் 5 போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளோம் - உக்ரைன் ராணுவம்https://t.co/wupaoCQKa2 | #Ukraine #UkraineRussie #UkraineRussiaConflict #Ukrain pic.twitter.com/sxTUTYBSss
— ABP Nadu (@abpnadu) February 24, 2022
இந்த நிலையில், ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் கூறியுள்ளது.
இதனிடையே, இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வீடு, ஹோட்டல்கள் என எங்கு இருந்தாலும் அங்கேயே பாதுகாப்பாக இருக்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Putin announces Russian military operation in Ukraine with explosions heard in Kyiv and other parts of the country.
— AFP News Agency (@AFP) February 24, 2022
Weeks of diplomacy to avert war and sanctions on Russia failed to deter Putin, who has massed over 150,000 troops on the Ukraine borderhttps://t.co/3wSRY3JBMF pic.twitter.com/qCOb80zkG3
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்