மேலும் அறிய

31ஆயிரம் கிலோ வாழைப்பழத்தை காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனை.. எப்படி தெரியுமா?

31,751 கிலோ வாழைப்பழத்தை காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ். இதெல்லாம் ஒரு சாதனையா என்று நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைக் கூட செய்து காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர்.

உதாரணத்துக்கு சில விஷயங்களைக் கூறலாம். உலகின் மிகப்பெரிய கேக் பாப். ஒரே கிளையில் முளைக்கவைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தக்காளிகள், மிகப் பெரிய பூசணிக்காய், மிக நீளமான நகங்கள், கூந்தல், அதிக காரமான மிளகாயை சாப்பிடுதல் என எண்ணற்ற விஷயங்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் உள்ளன.

உலகின் பிரம்மாண்ட பழக்காட்சி:
உலகின் மிகப் பிரம்மாண்டமனா பழக்காட்சி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் வெஸ்ட்மான்ட் என்ற புறநகர்ப் பகுதியில் இந்த சாதனை அரங்கேற்றப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 31, 751 கிலோ வாழைப்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பவுண்ட் கணக்கில் சொல்ல வேண்டும் என்றால் 70,000 பவுண்ட் வாழைப்பழங்கள். அந்த இடமே காண்பதற்கு வாழைப்பழ மழை கொட்டிக் கிடந்ததுபோல் உள்ளது.

பழ சப்ளையர்களானா ஃப்ரெஷ் டெல் மோன்டே மற்றும் சில்லறை விற்பனையாளர் ஜுவல் ஓஸ்கோ இணைந்து இந்த பிரம்மாண்ட பழக் காட்சியை நிகழ்த்தியுள்ளனர். இதை கின்னஸ் சாதனைக்காக அவர்கள் செய்தனர். இதனை வந்து பார்வையிட்ட கின்னஸ் அமைப்பின் நடுவர்கள் இதை சாதனை என்று ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளனர். இதனையடுத்து வெஸ்ட்மான்ட் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையானது இந்த சாதனை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளது.

கின்னஸ் சாதனையை வென்ற பின்னர், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள் அந்த ஊர் மக்களுக்கு வழங்கப்பட்டன. மீதமிருந்த பழங்கள் உணவு வங்கி மூலம் தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய பழக்காட்சி சாதனையில் 18,805 கிலோ பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் அப்போது 19 விதமான பழங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இப்போது 31 ஆயிரம் வாழைப்பழங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன. 

31ஆயிரம் கிலோ வாழைப்பழத்தை காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனை.. எப்படி தெரியுமா?

கின்னஸ் சாதனை புத்தக வரலாறு:

உலக சாதனைகள் பற்றி வெளிவரும் இந்த " Guinness World Records" என்பதே ஒரு உலக சாதனையை படைத்த புத்தகம். சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver) என்பவர் யோசனை குழந்தையை உருவாக்கிய சகோதரர்கள் நோரிஸ், ராஸ் மேக்விட்டர் என்பவர்களால் ஆகஸ்டு 1954ல் தொடங்கப்பட்டது. 27 ஆகஸ்டு 1955 இல் இவர்கள் முதல் பதிப்பு வெளிவிடப்பட்டது.
இதன் 2019 பதிப்பு நூறு நாடுகளில், 23 உலக மொழிகளில், பதிப்பிக்கப்பட்டது.  ஹ்யூக் பீவர் என்பவர் கின்னஸ் ப்ருவரீஸ் (Guinness Breweries) என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர்.

1951ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அயர்லாந்து நாட்டில் வேட்டையாட சென்றபோது, இவர் சுட்ட தங்கப் புறா (Golden Plover) எனப்படும் பறவை தப்பிப் பறந்தது. அன்று மாலை உலகத்திலேயே வேகமாக பறந்து விடக்கூடிய பறவை எது என்ற விவாதத்தில் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியாமல் போனது. அப்போது அவருக்கு இதுபோல உலகமக்கள் அறியாத பல விஷயங்கள் இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த சாதனை புத்தகம் அதன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அச்சடிக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் வெளிவந்து இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget