Bonus: அம்மாடியோவ்.. ரூ.80 லட்சம் போனஸ்...! பணியாளர்களை வாயைப் பிளக்க வைத்த முதலாளியம்மா...!
உலகம் முழுவதும் பெரு நிறுவனங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் சூழலில், ஒரு நிறுவனம் பணியாளர்களுக்கு 80 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரு நிறுவனங்கள் லே ஆஃப் எனப்படும் பணியாளர்கள் நீக்கத்தை மேற்கொண்டு வருகிறது. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், அமேசான் ஆகிய பெரு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையை விட்டு சென்று வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழலில், ஒரு பெண் முதலாளி தன்னுடைய பணியாளர்களுக்கு எல்லாம் போனஸ் வழங்கி ஆச்சரியத்தை அளித்துள்ளார். அதுவும் ஆயிரங்களில் அல்ல. லட்சங்களில் போனஸ் வாரி வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பெரு நிறுவனங்களின் உரிமையாளர் ரைன்ஹார்ட். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் இந்த பெண்ணும் ஒருவர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று ராய் ஹில். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 10 நபர்களுக்கு இந்திய மதிப்பில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே 80 லட்சம் ரூபாய் போனசாக வழங்கியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால், கிறிஸ்துமஸ் போனசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த 10 பணியாளர்களில் ஒரு பணியாளர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணியாளர்களுக்கு போனஸ் தொகையை வாரி வழங்கிய ரைன்ஹார்ட்டுக்கு கடந்த ஓராண்டில் 3.3 பில்லியன் ( அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 190 கோடி) வருவாய் கிட்டியுள்ளது.
லே ஆஃப் எனப்படும் பணியாளர்கள் நீக்கத்தால் உலகம் முழுவதும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் தங்களது பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக ரூபாய் 80 லட்சத்தை போனசாக வழங்கியிருப்பது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : வரலாறு காணாத போராட்டம்...வன்முறைக்கு மத்தியில் மூடப்பட்ட விமான நிலையம்.. எங்கு நடந்தது? என்ன நடந்தது?
மேலும் படிக்க: NASA Moon Mission: பூமிக்கு திரும்பிய ஆர்டெமிஸ் 1 காப்ஸ்யூல்.. தரவுகளை ஆராயும் பணியில் நாசா.. அடுத்த மிஷன் எப்போது?