Watch Video: நம்ம ஊரில் போராட்டம் தான் பண்ணுவாங்க... ஆஸி.,யில் நாடாளுமன்றத்தையே கொளுத்துறாங்க!
ஆஸ்திரேலியா இப்படி செயல்படுவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தை சின்னத்தை ஆஸ்திரேலியர்கள் தீயிட்டு கொளுத்துவது எனக்கு வெறுப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது
ஆஸ்திரேலியாவில் பழைய நாடாளுமன்றத்திற்கு போராட்டாக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களின் இறையாண்மைக்காக போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கான்பெர்ரா நகரில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் திடிரென்று பழைய நாடாளுமன்ற கட்டத்திற்கு தீ வைத்தனர். இதில் கட்டடத்தின் முன்கதவுகள் மற்றும் முன்பகுதி மளமளவென தீ பிடித்து எரிந்தது.
More footage of people watching as a fire consumes the front entrance to Old Parliament House in Canberra. Police and other agencies will have lots of footage to work with as they investigate. pic.twitter.com/xwbhlpB5zM
— Siobhan Heanue (@siobhanheanue) December 30, 2021
இந்த தீ வைப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. தீ வைக்கப்பட்ட உடன் கட்டிடத்திற்குள் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள், போராட்டக்களத்தில் அரசுக்கு எதிரான நபர்கள் இருந்ததாகவும், அவர்கள் தங்களை போராட்டக் காரர்கள் போல காட்டிக்கொண்டதாகவும் கூறினர்.
In pictures: Australia's former parliament building catches fire during an Aboriginal rights protest in Canberra pic.twitter.com/ypuDPRBipi
— TRT World Now (@TRTWorldNow) December 30, 2021
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரீசன் , “ ஆஸ்திரேலியா இப்படி செயல்படுவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தை சின்னத்தை ஆஸ்திரேலியர்கள் தீயிட்டு கொளுத்துவது எனக்கு வெறுப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் அரிதாக காணப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பொதுவான விஷயமாக மாறிவிட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்