Maldives President says: "இந்தியர்கள் மீது தாக்குதல்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" - மாலத்தீவு அதிபர்
இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாலத்தீவு மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்
இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.
An investigation has been launched by @PoliceMv into the incident that happened this morning at Galolhu stadium.
— Ibrahim Mohamed Solih (@ibusolih) June 21, 2022
This is being treated as a matter of serious concern and those responsible will be swiftly brought before the law.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை மாலத்தீவு தேசிய கால்பந்து மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய தூதரகம், இந்திய கலாசார மையம், மாலத்தீவு விளையாட்டு அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது, யோகா தின கொண்டாட்டத்தின் போது சிலர் மைதானத்தில் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக மாலத்தீவில் இந்தியர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது.
இதையடுத்து, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர இந்தியாவுக்கு மாலத்தீவு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தவர்கள் மீதுதாக்குதல் நடத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து விசாரணை செய்ய அதிபர் சோலி உத்தரவிட்டுள்ளார்.
Group of extremists disrupting International Yoga Day in #Maldives today.
— Manish Shukla (@manishmedia) June 21, 2022
Many Diplomats and top government officials were attending the event.#YogaDay pic.twitter.com/pn0r7mnuVv
Six were arrested after they disrupted Yoga Session held in Maldives Capital to celebrate Yoga Day. https://t.co/UUuLQBPz8T
— Ashoke Raj (@Ashoke_Raj) June 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்