மேலும் அறிய
Corona in India | நெருக்கடியில் இந்தியா, எப்படியாவது உதவ முயற்சிக்கிறோம் – அமெரிக்கத் தலைமை மருத்துவ ஆலோசகர்..
இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்ப முடியாது என அமெரிக்க அறிவித்திருக்கும் நிலையில் ஃபெளசியின் இந்தக் கருத்து முரணாக அமைந்துள்ளது

ஆண்டோனியோ ஃபெளசி
இந்தியாவில் இதுவரை 16.6 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 190,000 பேர் இறந்துள்ளனர். நாட்டில் நிலவிவரும் இந்தக் கொடுமையான சூழல் குறித்துக் கருத்துக்கூறியுள்ள அமெரிக்கத் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனியோ ஃபெளசி, “இந்தியா நெருக்கடியில் இருக்கிறது. இந்தச் சூழலில் அவர்களுக்கு எப்படியாவது உதவ முயற்சி செய்துவருகிறோம்.

அந்த நாடு மக்களுக்குத் தடுப்பூசி போடுவதுதான் இதற்கான ஒரே தீர்வு” எனக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்பமுடியாது என அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில் ஃபெளசியின் இந்தக் கருத்து முரணாக அமைந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
கல்வி
கிரிக்கெட்





















