சிம்பான்சி குரங்குடன் 4 வருட காதல்.. பெண்ணை எச்சரித்து அனுப்பிய மிருகக்காட்சி சாலை!
டம்மஸ்மேன் என்ற பெண் ஒருவர் சுற்றுலாப்பயணிகளைப்போல தினமும் மிருகக்காட்சி சாலைக்கு வருவாராம். அதோடு அந்த சிம்பன்ஸி குரங்கிடம் மட்டும் நேரம் செலவிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பாாராம்.
பெல்ஜியத்தில் சிம்பன்ஸி குரங்குடன் காதலில் இருந்த பெண்ணை மிருகக்காட்சி சாலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் விலங்குள் மீது பிரியமாக இருப்பது ஒரு விதமான காதல் என்று சொல்லலாம். அவர்களை தன்னுடன் பிறந்தவர்களைப் போன்று அவர்களை அரவணைத்து வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பெல்ஜியத்தில் உள்ள மிருகக்காட்சியில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆம் விலங்குகள் மீது காதல் கொள்ளலாம் ஆனால் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிம்பான்சியுடன் 4 ஆண்டுகள் காதலில் இருந்துள்ளார் அந்தப்பெண்.
பெல்ஜியத்தில் உள்ள அண்ட்வெர்ஸ்ப் என்ற மிருகக்காட்சி சாலை ஒன்று உள்ளது. அங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 38 வயதான சித்தா என்ற ஒரு வகையான சிம்பன்ஸி குரங்கு ஒன்று இருந்து வருகிறது. அந்த குரங்கினை தினமும் டம்மஸ்மேன் என்ற பெண் ஒருவர் சுற்றுலாப்பயணிகளைப்போல தினமும் மிருகக்காட்சி சாலைக்கு வருவாராம். அதோடு அந்த சிம்பன்ஸி குரங்கிடம் மட்டும் நேரம் செலவிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பாாராம். இதனை ஊழியர்கள் முறையாக கண்காணிக்கவில்லை.
இந்நிலையில் தான் ஒரு நாள் மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்ற சிம்பான்ஸி குரங்குகள் எல்லாம், 38 வயதான சித்தா என்ற சிம்பான்சியையும் மட்டும் சேர்க்கவில்லை. இந்த நடவடிக்கைகளை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், என்ன நடக்கிறது என்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது தான் இந்த சிம்பான்சியுடன் பெண் ஒருவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விருவரும் மாறி மாறி முத்தங்களை பகிர்ந்துக்கொண்டதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து வழக்கம் போல, மறுநாள் மிருகக்காட்சி சாலைக்கு வந்த அப்பெண்ணினை ஊழியர்கள் விசாரணை செய்தனர். அப்போது அப்பெண், நான் சித்தாவை நேசிப்பதாகவும், அவனும் என்னை நேசிப்பதாகவும் கூறினார். நாங்கள் இனிமேல் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாது எனவும் எங்களை பிரித்துவிடாதீர்கள் என்று அப்பெண் கூறியதைக்கேட்ட ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியாகிவிட்டனர்.
எனவே மிருகக்காட்சி சாலையில் உள்ள சிம்பன்சியின் நலனைக்கருத்தில் கொண்டு காதலில் இருந்த டம்மஸ்மேன் என்ற பெண்ணை இனிமேல் மிருகக்காட்சி சாலைக்கு வரக்கூடாது என்று ஊழியர்கள் தடை விதித்து விட்டனர். இதனால் அப்பெண் கண்ணீருடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பெல்ஜியத்தில் உள்ள மிருகக்காட்சி ஊழியர்களுக்கே தெரியாமல் பெண் ஒருவர் காதலில் இருந்த இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் விலங்குகள் மீது காதல் கொள்ளலாம். ஆனால் இதுப்போன்று உறவுவைத்துக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.