மாணவர்கள், மாணவிகள் ஒன்னா உக்காந்து ஆபாச படம் பாக்கணும்.. கல்லூரி அறிவிப்பால் அதிர்ச்சி..
அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள் அனைவரும் ஆபாச வீடியோக்களை ஒன்றாக பார்க்கும் வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![மாணவர்கள், மாணவிகள் ஒன்னா உக்காந்து ஆபாச படம் பாக்கணும்.. கல்லூரி அறிவிப்பால் அதிர்ச்சி.. america private college in Salt Lake City Utah announced porn video class for students மாணவர்கள், மாணவிகள் ஒன்னா உக்காந்து ஆபாச படம் பாக்கணும்.. கல்லூரி அறிவிப்பால் அதிர்ச்சி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/986258693cdeef4a17539f36004ecf85_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் சால்ட்லேக்சிட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பாலின சமத்துவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது அந்த கல்லூரியில் பிலிம் 3000 ஆபாச வீடியோக்கள் என்ற தலைப்பில் ஒரு வீடியோ வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் ஆபாச வீடியோக்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த படங்களை மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களுடன் பேராசிரியர்களும் அந்த வகுப்பில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
I thought this was a joke—it isn’t. This is a pornography class that you can enroll in at Westminster College in Salt Lake City. The class description reads that porn is as American as apple pie and students will watch pornographic films together and discuss sex as an art form. pic.twitter.com/ZxcWP8J2jB
— Candace Owens (@RealCandaceO) April 20, 2022
இந்த படங்களை பார்த்த பிறகு அவர்கள் அனைவரும் பாலின சமத்துவம் குறித்து பேராசிரியர்களும் மாணவர்களும் விவாதிக்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த கல்லூரி இணையதளம் அளித்துள்ள விளக்கத்தில், “ மாணவர்கள் மத்தியில் பாலின சமன்பாட்டை உருவாக்கவும், உடலுறவு குறித்த தெளிவான புரிதல்களை உருவாக்கவும் இந்த வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆபாச வீடியோக்களை பார்த்து அதில் உள்ள இனம், வகுப்பு, பாலினம் உள்ளிட்ட பல வேறுபாடுகளை பேசுவார்கள். உடலுறவு என்பது ஒரு கலை அதை எப்படி அணுக வேண்டும் என கற்றுக்கொள்வார்கள்” என்று விளக்கமளித்துள்ளது.
Imagine having to watch hardcore pornography with your professors in a private college in Salt Lake City, Utah. pic.twitter.com/C8Evj6z7R5
— James Lindsay, B-2 Spirit (@ConceptualJames) April 19, 2022
இந்த வகுப்பிற்காக மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த வகுப்பிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து ஆபாச வீடியோக்களை பார்ப்பது, ஆசிரியர்கள் அவர்களுடன் சேர்ந்து இதுதொடர்பாக விவாதிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். சிலர் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)