மேலும் அறிய

Afghanistan News: ஆஃப்கான் அவலம்..கம்பி வேலி மீது தூக்கிவீசப்படும் குழந்தை..வைரலாகும் வீடியோ!

இதுபோன்ற பரிதாபகரமான சூழல் அங்கே மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களையும் பாதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதயம் பலவீனமானவர்கள் இந்தக் காணொளியைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பை அடுத்து அங்கிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவது ஐந்தாம் நாளாகத் தொடர்ந்து வருகிறது. தலிபான்கள் மீதான அச்சத்தில் தங்களது நாட்டிலிருந்து தப்பியோட முயற்சிக்கும் மக்களை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே நேற்று மதியம் காபூல் விமான நிலையத்தில் பெற்றொர் ஒருவர் தனது கைக்குழந்தையை  எப்படியேனும் காப்பாற்றுவதற்காக வேலி மீது தூக்கி வீசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காபூல் விமான நிலையத்தின் சுவர் அருகே கூட்டமாக கூடி நிற்கும் காபூல் மக்கள் தங்களது குழந்தைகளை தலிபான்களிடமிருந்து எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்கிற பதட்டத்தில் கம்பி வேலிகளைத் தாண்டித் தூக்கி வீசுகின்றனர். வேலிகளின் மீது நின்றுகொண்டிருக்கும் சர்வதேச ராணுவத்தினர் அந்தக் குழந்தைகளைப் பிடித்து சுவரின் மற்றொரு பக்கம் நின்றுகொண்டிருக்கும் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கின்றனர். 

தலிபான்களிடமிருந்து எப்படியேனும் தப்பிக்க வேண்டும் என்கிற கதறல் அந்த வீடியோவில் எதிரொலிக்கிறது. அப்படி தூக்கிக் கொடுக்கப்பட்ட சில குழந்தைகள் அந்தக் கம்பிகளில் மாட்டிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Shabnam Nasimi (@shabnamnasimi)

இதுபோன்ற பரிதாபகரமான சூழல் அங்கே மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களையும் பாதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதயம் பலவீனமானவர்கள் இந்தக் காணொளியைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கையில் வீழ்ந்ததையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அருகில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் அவர் தஞ்சமடைந்திருக்கக்கூடும் என உலக நாடுகள் நினைத்துவந்த நிலையில் அவர் அபுதாபியில் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சொத்துக்களை அஷ்ரப் கனி திருடிச்சென்றிருப்பதாகவும், அவரை ஒப்படைக்கவேண்டுமெனவும் தலிபான்கள் பிற நாட்டு தூதரகங்களிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ‛‛நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’’ -துணை அதிபர் அமருல்லா சலேஹ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் ”ஆஃப்கானின் அரசியல் சாசனத்தின்படி அதிபர் இல்லாத சமயத்திலோ அல்லது அவர் தப்பியோடிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ அந்தச் சூழலில் அதிபருக்கான பொறுப்பை துணை அதிபர்தான் ஏற்பார். நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தலிபான் தீவிரவாதத்துக்கு தான் என்றுமே தலைவணங்கப்போவதில்லை எனவும் தன்னை நம்பியவரை என்றுமே காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்றும் தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் இருப்பது சாத்தியமே இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது.  இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள்,  சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget