Afghan Earthquake: ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மீண்டும் உயிர்ச்சேதமா?
ஹெராட் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இது 6.3 கிமீ (நான்கு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
![Afghan Earthquake: ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மீண்டும் உயிர்ச்சேதமா? Afghanistan Earthquake Magnitude 6.3 Strikes Afghan National Center for Seismology Afghan Earthquake: ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மீண்டும் உயிர்ச்சேதமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/15/bb784220808a0ea018f3cbeecb9058d21697349526578571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வரமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஹெராட் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இது 6.3 கிமீ (நான்கு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 6.3 என்ற ரிக்டர் அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டாலும், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இதே ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 90% க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநாவின் குழந்தைகள் நிறுவனம் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஈரானிய எல்லைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராட்டின் வடமேற்கே 30 கிமீ தொலைவில் சமீபத்திய நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில், இது யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது என தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம்:
முன்னதாக கடந்த வாரம் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவில் மூன்று நிலநடுக்கங்களும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.நா புள்ளிவிவரங்களின்படி, 1,294 பேர் இறந்தனர், 1,688 பேர் காயமடைந்தனர். ஜெண்டா ஜான் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடும் அழிக்கப்பட்டதாக இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெராட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்குவதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்கள் (IFRC) தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆப்கான் ரெட் கிரசண்ட் சொசைட்டியும், நிவாரண நடவடிக்கைகளில் அயராது உழைத்து வருகிறது, மேலும் நீண்ட காலத்திற்கு வீடுகளை புனரமைப்பதிலும் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏன் வருகிறது..?
அதிக நில அதிர்வு மண்டலத்தில் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக இந்த இயற்கையின் நில அதிர்வு நிகழ்வுகள் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி ஏற்படுகிறது.இந்த நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் மற்றும் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும். இது போன்ற இயற்கை பேரிடர்களின் விளைவுகளைத் தணிக்க தயார்நிலை, உள்கட்டமைப்பு பின்னடைவு மற்றும் திறமையான பேரிடர் மேலாண்மை உத்திகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது தொடர்ந்து நினைவூட்டுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)