வண்ண விளக்குகளால் மிளிரும் அபுதாபி.. விண்வெளி வீரர் வெளியிட்ட போட்டோ!
ப்ரெஞ்ச் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் அடிக்கடி விண்ணில் தங்கியிருக்கும் வீரர்களின் வாழ்க்கைப்பற்றி பகிர்வதால் டிவிட்டரில் இவரை ஃபாலே செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரெஞ்ச் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் டிவிட்டரில் பகிர்ந்த அபுதாபியின் கண்கவர் புகைப்படங்கள் சோஷூயல் மீடியாவில் வைரலாகிவருகிறது.
ஐக்கிய அரபு நாடுகள் பாரசீக வளைகுடாவில் அரேபியத் தீபகற்பத்தின் தென் கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான்,தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் உள்ளன. மேலும் கத்தார்,ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக்கொண்டுள்ளன. மேலும் நேர்த்தியான நகரக்கட்டமைப்பு, வெவ்வேறு தளவமைப்புகள் சீராக அமையப்பெற்றுள்ள நாடாகவும் விளங்கிவருகிறது. இங்கு சுற்றுலாவிற்காக வெளிநாடுகளிருந்து வருவது வழக்கம். ஆனாலும் அவர்கள் அனைத்து இடங்க
ளையும் முழுமையாக பார்த்துவிடுவார்களா? என்று கூறமுடியாது. மேலும் எத்தனை ட்ரோன் கேமிராக்கொண்டு புகைப்படங்களை எடுத்திருந்தாலும் வரவேற்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.
Abu Dhabi 🇦🇪 at night is a very distinctive city. The districts seem to have different layouts and different lighting and there are distinct shapes to be made out... ↙ #MissionAlpha https://t.co/8c4ioeCrDZ pic.twitter.com/deI2KvQ9dk
— Thomas Pesquet (@Thom_astro) September 30, 2021
ஆனால் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் அபுதாபியின் புகைப்படத்தை டிவிட் செய்திருக்கிறார் ப்ரெஞ்ச் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட். இதில் இங்குள்ள மாவட்டங்கள் வெவ்வேறு தளவமைப்புகள் மற்றும் வெவ்வேறு விளக்குகளைக்கொண்டிருப்பது அருமையாகக் காட்சியளிக்கிறது. மேலும் இந்த நகரத்தைந்நேர்த்தியாகத் திட்டமிட்டுள்ளார்கள் எனவும்? விண்வெளி வீர்கள் இங்கிருந்து பார்க்கும் போது இந்த நகரத்திட்டமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ப்ரெஞ்ச் நாட்டைச்சேர்ந்த விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கட் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே தாமஸ் பெஸ்கெட் அடிக்கடி விண்ணில் தங்கியிருக்கும் வீரர்களின் வாழ்க்கைப்பற்றி பகிர்வதோடு, என்ன நடக்கிறது என்பதை வீடியோ வாயிலாகவும் தெரிவித்து வருவார். எனவே டிவிட்டரில் இவரைப் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கைஅதிகம். இந்நிலையில் தான் விண்ணிலிருந்து இரவு நேரத்தில் அபுதாபியின் கண்கவர் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்,“ ரசனை மிகுந்த விஞ்ஞானி, தண்ணீர், பாலைவனம், கட்டமைப்பு அனைத்தையும் அருமையாக எடுத்துள்ளீர்கள், நீங்கள் விண்ணிலிருந்து புகைப்படம் எடுக்கும் அளவிற்கு ஜூம் லென்ஸை வைத்துள்ளீர்களா? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
The stuff we do for @ISS_Research! Hanging by a web 🕸 for the Grasp experiment analysing how our 🧠 coordinates 👁👁, 💪 and 🖐 when reaching for objects in #VR. #MissionAlpha @iss_research
— Thomas Pesquet (@Thom_astro) September 29, 2021
🔗 https://t.co/JJTybUzOE8 pic.twitter.com/m4p8LhlurO
குறிப்பாக ப்ரெஞ்ச் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விண்வெளியில் உடற்பயிற்சி செய்த வீடியோ வைரலானது. அதேப்போல் விண்வெளியில் பீட்சா சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.