மேலும் அறிய
Advertisement
கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் - பறவை மீது பயணம் செய்த பறவை
கடல் பறவை ஒன்றின் மீது மற்றொரு கடல் பறவை பயணம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
'கடல் தாண்டும் பறவைக்கெல்லாம், இளைப்பாற மரமே இல்லை, சளைக்காமலே கண்டம் தண்டுமே..' என்று கவிஞர்கள் பாடல் வடிவில் பறவைகளின் குணங்களை பற்றி எழுதியுள்ளனர். குறிப்பாக மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் கடைசி பாடலாக கருதப்படும் புள்ளினங்கள் பாடல் பறவைகளை பற்றி பல கதைகள் கூறும்.
இந்நிலையில் இணையத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வரும் இந்த காணொளியில் ஒரு கடல் பறவை பறந்துகொண்டிருக்க அதன் முதுகில் மற்றொரு பறவை ஓய்யாரமாக சிறுது நேரம் ஓய்வெடுத்து கொண்டு மிதந்து வரும் வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.
No way! 🤯 pic.twitter.com/62UF9c7GBw
— Buitengebieden (@buitengebieden_) April 24, 2021
பறவைகளுக்கு இயல்பாகவே இந்த குணாதிசியம் உண்டா என்பது தெரியவில்லை என்றபோதும் ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஓய்யாரமாக பறக்கும் இந்த காணொளி காண்பதற்கு ரம்யமாகவே உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion