(Source: ECI/ABP News/ABP Majha)
Papua New Ginea : பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.3 ரிக்டர் அளவாக பதிவு..
பப்புவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மோரோப் மாகாணத்தின் லே அருகே ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மோரோப் மாகாணத்தின் லே அருகே ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Notable quake, preliminary info: M 6.3 - 118 km ESE of Madang, Papua New Guinea https://t.co/uvZNAW4lDc
— USGS Earthquakes (@USGS_Quakes) March 14, 2023
மார்ச் 14, 2023, செவ்வாய்க் கிழமை, அந்நாட்டு நேரப்படி காலை 10:49 மணியளவில், பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்தின் லே, அருகே 221.6 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகுந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் நில அதிர்வின் வலிமையானது சற்று குறைந்து பதிவாகியுள்ளது என கூறியுள்ளனர். மொரோப் மாகாணத்தின் லேவிலிருந்து 119 கிமீ தொலைவில் உள்ள மடாங் (பாப். 27,400), 144 கிமீ தொலைவில் கைனந்து (பாப். 8,500) மற்றும் 145 கிமீ தொலைவில் உள்ள லே (பாப். 76,300) ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வடக்கு பகுதியில், காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவாக பதிவானது.
பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கான், தஜிகிஸ்தான், இந்தியாவின் மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் தஜிகிஸ்தானின் முர்ஹொப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
மேகாலயா மாநிலத்தில் துரா என்ற நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ள்னர்.
Chaithra Navarathri : நவராத்திரிக்கு முன் வரும் சைத்ர நவராத்திரி...சிறப்புகள் என்ன?