Senegal Accident : செனகலில் சோகம்.. பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...40 பேர் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய நாடு..
மத்திய செனகலில் பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் 40 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Senegal Accident : மத்திய செனகலில் பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் 40 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செனகலில் கோர விபத்து
மத்திய செனகலில் உள்ள காஃப்ரைன் மற்றும தம்பா இடையே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தம்பா என்ற பகுதியில் இருந்து வந்த பேருந்தும், டக்கார் என்ற பகுதியில் இருந்து வந்த பேருந்தின் மீது ஒன்றுக் கொன்று மோதிக் கொண்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 78 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துக்கம் அனுசரிப்பு
இந்நிலையில் செனகல் ஜனாதிபதி மேக்கி சால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது, இந்த கோர விபத்தில் உயிரிழந்த 40 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கள் எனவும் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.
Je suis profondément attristé par le tragique accident routier de ce jour, à Gniby, occasionnant 40 morts et de nombreux blessés graves. J’adresse mes condoléances émues aux familles des victimes et souhaite prompt rétablissement aux blessés.
— Macky Sall (@Macky_Sall) January 8, 2023
தேசிய துக்கம் முடிந்த பிறகு, சாலை பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என செனகல் ஜனாதிபதி மேக்கி சால் தெரிவித்துள்ளார்.
Suite au grave accident de ce jour à Gniby ayant causé 40 morts, j’ai décidé d’un deuil national de 3 jours à compter du 9 janvier. Un conseil interministériel se tiendra à la même date pour la prise de mesures fermes sur la sécurité routière et le transport public des voyageurs.
— Macky Sall (@Macky_Sall) January 8, 2023
விபத்துக்கான காரணம்
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்துக்குகான காரணம் தெரியவந்தது. அதன்படி, ” பயணிகளை ஏற்றி வந்து பேருந்தின் டயர் வெடித்ததை அடுத்து, வேறு பாதைக்கு பேருந்து சென்றதால், அந்த சாலையில் வந்த பேருந்து மீது மோதியுள்ளது” என தெரியவந்தது. விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகின.