Watch Video : துருக்கியில் இரு வேறு பகுதிகளில் கோர விபத்து.! 32 பேர் பரிதாப உயிரிழப்பு.!
துருக்கியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற கோர விபத்துக்களில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது காசியான்டெப். காசியான்டெப் நகரில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது, அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுவும், பத்திரிகையாளர்களும் வந்தனர்.
Another Video: Multiple people dead after deadly semi-trailer truck accident in Mardin, #Turkey pic.twitter.com/GpoItN8FPZ
— Siraj Noorani (@sirajnoorani) August 21, 2022
அப்போது, மருத்துவக்குழுவினர் மீட்பு பணியிலும், செய்தியாளர்கள் சேகரிப்பு பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு பேருந்து விபத்திற்குள்ளாகியது. சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிக் கொண்டு வந்த அந்த பேருந்து முதலாவதாக விபத்திற்குள்ளாகிய பேருந்து மீது மீண்டும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், ஏற்கனவே காயமடைந்தவர்களுடன், மருத்துவக்குழுவினரும், பத்திரிகையாளர்களும் காயம் அடைந்தனர். சிலர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பின்னர், இந்த இரு விபத்தினாலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவக்குழுவினர் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
#Turkey: At least 32 killed in separate crashes at #accident sites, 16 killed in #Gaziantep province and at least 16 others killed in #Mardin province pic.twitter.com/gI5hpQPp6G
— Himanshu dixit (@HimanshuDixitt) August 21, 2022
இந்த சம்பவத்தை போலவே மற்றொரு விபத்து சம்பவமும் நேற்று துருக்கியில் அரங்கேறியது. அந்த நாட்டில் அமைந்துள்ள டெரிக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மார்டினிலும் இதேபோல விபத்து ஒன்று ஏற்பட்டது. மார்டினில் நடைபெற்ற விபத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
மார்டினில் நடைபெற்ற விபத்து மிகவும் கோரமாக அரங்கேறியுள்ளது. அதாவது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மிகுந்த வேகமாக வந்த வேன் ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த வாகனங்கள் அனைத்தையும் இடித்து தள்ளிவிட்டு மக்கள் கூட்டத்திற்குள் சென்று பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த கார்களை எல்லாம் இடித்து தள்ளி நின்றது.
இதில், வேன் மோதி பலரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் ஒரே நாளில் இரு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு விபத்துக்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : Watch Video: ஸ்கை டைவிங்குக்கு முன் விமானத்தில் தொங்கியபடி பெண் உடற்பயிற்சி... வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!
மேலும் படிக்க : நாடு திரும்பும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு!