Watch Video: ஸ்கை டைவிங்குக்கு முன் விமானத்தில் தொங்கியபடி பெண் உடற்பயிற்சி... வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!
கேட்டி வசெனினா எனும் பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் தான் ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் விமானத்தின் வெளியே உள்ள கம்பிகளில் தொங்கியபடி வயிற்றுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
செய்திகள், தகவல் பரிமாற்றம், ட்ரெண்டிங் விஷயங்கள் தாண்டி, சமூக ஊடகங்கள் பொதுவாக எண்ணற்ற மனிதர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மைதானமாக விளங்குகின்றன.
இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நபர்களும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிப்படுத்தியும், ஃபோட்டோக்கள், வீடியோக்கள் பகிர்ந்தும் ட்ரெண்ட் ஆகி நெட்டிசன்களின் லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னதாக ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் பெண் ஒருவர் விமானத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ, இன்ஸ்டாவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
கேட்டி வசெனினா எனும் பெண் ஆகஸ்ட் 1ஆம் தேதி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், தான் ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் விமானத்தின் வெளியே உள்ள கம்பிகளில் தொங்கியபடி வயிற்றுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து தன்னை விடுவித்துக் கொண்டு வானில் குதித்து பறவையாக மாறி ஸ்கை டைவிங் செய்கிறார்.
View this post on Instagram
”ஆப்ஸ் (வயிற்றுப் பகுதிக்கான உடற்பயிற்சி) பயிற்சி செய்வதற்கான ஒரே வழி”என வசெனினா குறும்பாகப் பகிர்ந்துள்ள இந்த க்யூட்டான வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் லைக்ஸ்களைக் கடந்து நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.
View this post on Instagram
பிஹெச்டி படித்து முடித்துள்ள வசெனினா ஸ்கைடைவிங் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், தான் ஸ்கைடைவிங் மேற்கொள்ளும் பல சாகச வீடியோக்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.