Watch video | 7 அடி முள்படுக்கையில் படுத்துக்கொண்டே அருள்வாக்கு வழங்கிய பெண் சாமியார்..
’’உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு முட்களால் 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டிருந்தது’’
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாடனேந்தல் கிராமத்தில் புகழ் பெற்ற பூங்காவனம் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. மதுரை, சிவகங்கை மாவட்ட மக்கள் அதிகளவு இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோயிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார். இவரது சிறுவயது முதல் தற்போது வரை 48 நாட்கள் விரதம் இருந்து முள்படுக்கையில் அமர்ந்தும், நின்று கொண்டும், ஆடியபடியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். கடந்த 45 ஆண்டுகளாக இந்த அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
முள்படுக்கையில் பெண் சாமியார் ஆசி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடைபெறும் நூதன திருவிழா.#Abpnadu | #spritual | #festivel pic.twitter.com/vFLfdhvorI
— Arunchinna (@iamarunchinna) January 3, 2022
இந்நிலையில் இந்தாண்டு 45 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து அருளாசி வழங்குவதற்காக கோயில் முன்பு உள்ள திடலில் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு முட்களால் 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டிருந்தது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
மேலும் இந்த கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர், இதை தொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்தும், நின்று கொண்டும், படுத்துக்கொண்டும், ஆடியபடியும் ஆக்ரோசமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களும் மற்றும் வெளிமாவட்ட மக்களும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து மானாமதுரை பக்தர்கள் கூறுகையில், முள்படுக்கையில் அமைத்து அருளாசி வழங்குவது விஷேசமானது. பக்தர்களின் கஷ்டங்களை அம்மன் தாங்கி வலிகளை நீக்குகிறாள் என்ற நம்பிக்கையில் அம்மனை வேண்டிக் கொள்கிறோம். உலகத்தில் பல்வேறு கஷ்டங்களும் நீங்க வேண்டும் என பிராத்தனை செய்துகொண்டோம்” என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்