மேலும் அறிய
Advertisement
Local body election | கடலூர் திமுக அலுவலகத்தில் காரணம் தெரியாமல் போராடிய பெண்கள் - எழுதி கொடுத்ததை படித்துவிட்டோம் எனக் கூறி கலைந்து சென்றதால் சிரிப்பலை
கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நகர செயலாளர் ராஜாவின் மனைவி நேற்று மனுத்தாக்கல் செய்தார். இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியல்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். அதே போல் திமுக சார்பிலும் இது வரை நான்கு பாகங்களாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியானது, அதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில். இன்று காலையில் சுமார் 50 பெண்கள் திமுக நகர அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் முன் நின்று நகர செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென கோஷம் எழுப்பினர்.
இதனை அடுத்து அங்கு இருந்த உளவு துறை காவல் துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் எந்த வார்டு, யார் தலைமையில் போராட்டம், எதற்கு இந்த போராட்டம் என்று விசாரித்த போது ஒவ்வொரு பெண்களும் ஒரு பதில் கூறினர். மகளிர் சுய உதவிக் குழு பணம் கட்ட வந்ததாக சிலரும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறி அழைத்து வந்தார்கள் என்றும் கூறினர், அதில் கோஷம் போட்ட பெண்மணி எதற்கு கோஷம் போடுகிறோம் என்றெல்லாம் தெரியாது எழுதி குடுத்து கோஷம் பொட சொன்னார்கள் கோஷம் போட்டோம் என கூறினார், பின்னர் அவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
எதற்காக போராட்டம் என்று தெரியாமலே திமுக அலுவலகம் முன் கோஷமிட்ட பெண்களால் அந்த இடமே சிரிப்பு அலையாக மாறியது. ஏற்கனவே கடலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளருக்கு திமுக வில் கடும் போட்டி நிகழ்ந்து வரும் சூழலில் இந்த சம்பவம் கடிசியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நகர செயலாளர் ராஜாவின் மனைவி நேற்று மனுத்தாக்கல் செய்தார். இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion