மேலும் அறிய

மரக்காணம் அருகே சாலைக்காக 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் ; தொடரும் அவலநிலை

மரக்காணம் அருகே சாலைக்காக 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்.

சாலைக்காக 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்

விழுப்புரம்: மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வண்டிப் பாளையம் மற்றும் ஆத்திகுப்பம் ஊராட்சிகள். இந்த பகுதியை சுற்றிலும் தேவிகுளம், நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், கோடிப்பாக்கம், கிளாப்பாக்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மரக்காணம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்கிங்காம் கால்வாய் வழியாக வண்டிப்பாளையம் ஆத்திகுப்பம் ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட சாலை வழியாகத் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு பல கோரிக்கை வைத்தனர்.

சாலை அமைக்க கூடாது என தடுத்த வனத்துறை

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுக்கு முன் இச்சாலையை சரி செய்யவும், பக்கிங்காம் கால்வாயில் பாலம் அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பணியை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது வனத்துறை சார்பில் இந்த சாலை உள்ள பகுதி தற்பொழுது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இப்போது இங்கு சாலை அமைக்க கூடாது என தடுத்து நிறுத்தி விட்டனர். மேலும், இங்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள வனத்துறை அலுவலகம் முதல் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர். இதன் காரணமாக இச்சாலை அமைக்கும் பணி தடைபட்டது.

இந்த தார் சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மழை பெய்தால் இந்த மண் சாலை நீரில் மூழ்கிவிடும். இதனால் இந்த சாலை அனைத்து நாட்களிலும் சேரும் சகதியுமாக காணப்படும். இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மரக்காணம் வழியாகத் தான் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேரும் சகதியுமாக காணப்படும் ஆத்திகுப்பம் வண்டிப்பாளையம் சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Breaking News LIVE: புனே அருகே அருவியில் வெள்ளப்பெருக்கு! 5 பேரில் 2 பேர் சடலமாக மீட்பு!
Breaking News LIVE: புனே அருகே அருவியில் வெள்ளப்பெருக்கு! 5 பேரில் 2 பேர் சடலமாக மீட்பு!
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
Embed widget