மேலும் அறிய

Villupuram : விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் .....இதோ உங்கள் பார்வைக்கு

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்....தீவிர விசாரனையில் பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு 

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு 

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சீருடை பணியாளர் தேர்வானையத்தின் இயக்குனர் சீமா அகர்வால் இன்று  ஆஜராகி சாட்சியம் அளித்ததை தொடர்ந்து வழக்கு விசாரனையை 25ம் தேதிக்கு நீதிபதி புஷ்பராணி ஒத்தி வைத்தார்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வழக்கறிஞர் 13 நாட்களாக குறுக்கு விசாரணையை நடத்தி அதனை நிறைவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. இருவரும் ஆஜராகாததற்கு காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டதை நீதிபதி புஷ்பராணி ஏற்க்கொண்டார். அதனை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியமாக சேர்க்கபட்ட சீருடை பணியாளர் தேர்வானையத்தின்  இயக்குனர் சீமா அகர்வால் இன்று  ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த சாட்சியம் முடிந்ததும் சீமாஅகர்வாலிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் தரப்பு வக்கீல்கள் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தனர். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையின் விவரங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாணவி தாயார் மனு தாக்கல்

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை வழங்க கோரியும், பெரியப்பாவின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து பெற்று தரக்கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மாணவியின் தாயார் பெரியப்பா மனு தாக்கல் செய்தனர்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக  சிபிசிஐடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் மாணவியின் உறவினர்கள் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிற நிலையில் மாணவியின் (பெரியப்பா) செல்வத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரனை செய்து அவரது செல்போனை வாங்கி கடந்த செப்டம்பர் மாதம் வாங்கி சென்றனர். அதன் பின்னர் செல்போனை சிபிசிஐடி போலீசார் செல்வத்திடம் அவரது செல்போனை ஒப்படைக்காததால் தனது செல்போனை வழங்ககோரி அக்டோபர் 14 ஆம் தேதி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து மீட்டு தரக்கோரி செல்வம் தரப்பில் அவரது வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கையை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினரின் ஆய்வறிக்கையின் நகலை வழங்க கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம்: அரசுகேபிள் டிவி நெட்வொர்க்கில் ஏற்பட்டுள்ள மென்பொருள் சேவை தடையை நீக்க வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தடைபட்டதால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் சேனல் தெரியாததால் வாடிக்கையாளர்களும், அரசு கேபிள் டி வி ஆபரேட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப பாதிப்புகளை  சரி செய்யும் பணியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வந்தாலும் மூன்று நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படாததால் இதனால் பாதிப்பிற்குள்ளான அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெட்வொர்க் பிரச்சனை தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரியான பதில் தர மறுப்பதாகவும், டிடிஎச் தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் செயல் போல் உள்ளதாக கூறு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதலால் பதற்றம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காண பகுதியில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது எடுத்து மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கைப்பணி குப்பத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் அரசு விதித்த தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றதால் அதே குப்பத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் ஏன் மீன்பிடிக்க செல்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது,  இதனால் இளையராஜா விற்கும் கார்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன், இதன் எடுத்து இளையராஜா திறப்பினர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இருதரப்பினரையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது இதனால் நான்கு பேர் மண்டை உடைக்கப்பட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Breaking News LIVE: உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Breaking News LIVE: உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget