மேலும் அறிய

குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாக கூறிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

விழுப்புரம் : குடிநீர் தேக்க தொட்டிசுத்தம் செய்யாமைலையே சுத்தம் செய்ததாக கூறிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அதிரடி.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 688 ஊராட்சிகளில் 2286 உட்பட்ட கிராமங்களில் 3689 பெரிய தண்ணீர் தொட்டிகள், 1872 சிறிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சரியான முறையில் பராமரித்து சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் மெகா தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும், சுத்தம் செய்யப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார். எனவே, அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய தேவையான பணியாளர்களை பணியமர்த்திட மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார். அதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகி, அனந்தலட்சுமி மற்றும் அதிகாரிகள் கோலியனூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு, பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து கோலியனூரை அடுத்த பாளை அகரம் ஊராட்சிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார்.  இதையடுத்து பாளைஅகரம் ஊராட்சி செயலர் விநாயகம் அழைத்து விசாரித்தார். அவர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துவிட்டதாக கூறினார். ஆனால் அவர் சுத்தம் செய்யாததால் விநாயகத்தை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பாளைஅகரம் ஊராட்சி தலைவர் லதாவை அழைத்து வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து பணங்குப்பம் ஊராட்சி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கை ஊராட்சி செயலர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget